பெசில் ராஜபக்‌ஷ கூறுவதற்கேற்ப ஆட நான் ஒன்றும் பொம்மை கிடையாது என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு

மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் ​போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நான் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து பெசில் ராஜப‌க்ஷ பெரும் ஆத்திரம் கொண்டுள்ளார்.

அதன் காரணமாக என்னை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குவதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். எனினும், அவர் நினைப்பதைப் போன்று நான் ஒன்றும் சிறுபிள்ளை கிடையாது. நான் விஜயதாஸ ராஜப‌க்ஷ, அதுவும் சட்டத்தை நன்றாக அறிந்த நீதி அமைச்சர்.

அதே ​போன்று பெசில் ராஜபக்ஷ கூறுவதற்கு ஏற்ப ஆட நான் ஒன்றும் பொம்மையும் கிடையாது. எனவே பசில் அவரால் முடிந்ததைச் செய்து கொள்ளட்டும். அதனை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராகவே இருக்கின்றேன்.

அதேபோன்று, சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு ஒன்று கூடியே என்னைப் பதில் தலைவராக நியமித்துள்ளது. அந்த விடயம் சட்டபூர்வமாகவே நடைபெற்றுள்ளது. அதனையும் யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

 

 

01 WhatsApp Tamil 350

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி