ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தாலும், ஜூன் மாத இறுதியில் அது

பற்றிய இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் முன்னதாக, ரணில் விக்கிரமசிங்கவின் முடிவை மே மாத நடுப்பகுதியில் அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பெசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

அந்த சந்திப்பின் பின்னர், ஜனாதிபதி மற்றும் பெசில் ராஜபக்ஷவுடன், பிரதமர் தலைமையில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களின் சந்திப்பும் இடம்பெற்றது.

ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி வேட்புமனு தொடர்பில் அறிவிக்கப்பட்ட பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என இந்தக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகவும், ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ரணில் - பெசில் சந்திப்பின் பின்னர் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பில், பிரதமர் தினேஷ் குணவர்தன, அmமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டீ சில்வா, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், கஞ்சன விஜேசேகர மற்றும் அநுர யாப்பா ஆகியோரையும் ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

மக்களுக்குப் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதில் ஏற்படக்கூடிய சிக்கலைத் தவிர்க்கவே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பு பிற்போடப்பட்டு வருவதாக, அரசாங்க உள்விவகாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

01 WhatsApp Tamil 350

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி