இந்நாட்டுக்குத் தேவைப்படும் எரிபொருள் உற்பத்திற்கு அவசியமான மசகு எண்ணெயை வரவழைப்பதற்கு டொலர் இல்லாமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கை ரூபாவில் பணம் பெற்றுக்கொள்ள விரும்பும் வழங்குநர்களை தேடிக் கொண்டிருப்பதாக எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார்.

தற்போது 26 நாட்களுக்கு மாத்திரம்; போதுமான மசகு எண்ணெய் கையிருப்பில் உள்ளதாகக் கூறிய அமைச்சர், தொடர்ந்தும் மசகு எண்ணெய் வழங்குவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மசகு எண்ணெய் இல்லாமையால் கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட் நிகழ்வில் கலந்துக் கொண்ட அமைச்சர் மேலும் கூறுகையில், டொலர் இல்லாமையானது அமைச்சு மட்டத்தில் தீர்க்கக் கூடிய பிரச்சினையல்ல எனவும் கூறினார்.

50 மில்லியன் டொலர் செலவிட்டு 26 நாட்களுக்குப் போதுமான 7 லட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் வரவழைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், மசகு எண்ணெய் வழங்குநர்களுக்கு செலுத்த டொலர் இல்லாமையால் ரூபாயில் பெற்றுக் கொள்ள விரும்பும் வழங்குநர்களை தேடிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி