செய்திகள்
Showing page 1009 of 1201 (18,013 articles)

இலங்கையில் மீண்டும் கொரோனா பரவ அரசாங்கத்தின் முட்டாள் தனமான முடிவுகளே காரணம்! சம்பிக்க
இலங்கையில் கொரோனா தொற்றின் வீரயம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. நாளாந்தம் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறான தொற்று பரவுவதற்கான காரணத்தை பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) வெளியிட்டுள்ளார்.

விமுக்தி அரசியலுக்கு வருவார் என்ற கதை பொய்! சந்திரிகா
அவரது மகன் விமுக்தி குமாரதுங்க தீவிர அரசியலில் நுழைகிறார் என்று இந்த நாட்களில் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவும் வதந்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் ஆதாரமற்றவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறுகின்றார்.

கொழும்பு டாம் வீதி பகுதியில் உள்ள (Diamond Complex) கட்டடத்தில் தீ!
கொழும்பு டாம் வீதி பகுதியில் தொடர்மாடிக் கட்டடமொன்றில் (Diamond Complex) தீ பரவியுள்ளது.தீயை கட்டுப்படுத்த 8 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.

உரப்பையில் கட்டப்பட்ட நிலையில் வாழைச்சேனையில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பு வாழைச்சேனை பொதுச்சந்தைப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உள்ளுர் உற்பத்தியை மீளக் கொண்டுவர முயற்சி! அனுராதா ஜகம்பத்
43 வீதமாக இருந்த எமது உள்ளுர் உற்பத்தி தற்போது 7.5 வீதமாக மாறியுள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் நிரந்தரமான விவசாயக் கலாசாரத்தைத் தேற்றுவிக்க வேண்டும். நிலைபேறான விவசாய

வீட்டிற்குச் சென்று தடுப்பூசி போடுங்கள்!
தடுப்பூசி மையங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு வீடு சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுவரை தடுப்பூசி போடப்படாத இவர்களுக்கு தடுப்பூசி போடுமாறு அனைத்து பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே கூறினார்.

தம்பானையைச் சேர்ந்த ஆதிவாசி கொவிட் 19 தொற்றினால் பலி!
இலங்கையின் ஆதிவாசி ஒருவர் முதல் முறையாக் கொவிட் 19 தொற்றினால் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.பண்டாரவளை அரசினர் மருத்துவமனையிலேயே, மேற்படி மரணம் பதிவாகி உள்ளது.

இஸ்ரேலில் 500 வேலை வாய்ப்புகள்!
500 இலங்கை தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தொழில் அமைச்சர் கூறுகிறார்.பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி எழுப்பிய வாய்மொழி வினாவுக்கு பதிலளிக்கும் விதமாக ஆகஸ்ட் 06 வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்தார்.

கவிஞர் அஹ்னாஃப் ஜசீம் தடுத்து வைக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து சட்டத்தரணிகளுக்கு சந்திக்கும் வாய்ப்பு!
பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜசீமை சந்திக்க அவரது சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் புதிய விதிமுறைகளுக்கு நீதிமன்றம் தடை!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பிறப்பிக்கப்பட்ட ”கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்கும் உத்தரவு” அமுல்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவின் காட்சி இலங்கையில் அரங்கேறுகிறதா?
இலங்கையில் தற்போது கொரோனா வைரசின் டெல்டா திரிபு மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கிறார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்கள் கைது! மூவறுக்கு பினை
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் அமில சந்தீப ஆகியோர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோத்தா-மகிந்த ஆட்சிக்கு எதிராக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஊடக அறிக்கை!
உயர் கல்வியைத் தனியார் மயப்படுத்தி ஒட்டு மொத்த இலவசக் கல்விக்கு வேட்டு வைக்கவும்,அதே போன்று கல்வித் துறையினை ராணுவமயப்படுத்தவுமே கொத்தலாவல பல்கலைக் கழகச் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற கோத்தா-மகிந்த ஆட்சி முன்நிற்கின்றது.

இராணுவமயமாக்கலை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
நீர்கொழும்பில் வடக்கு,கிழக்கு உள்ளிட்ட முழு நாடும் இராணுவமயமாக்கப்படுவதற்கு எதிராக ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுதும் மீண்டும் பயணத்தடையா! ஜனாதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை
நாட்டில் கொரோனா தொற்று மற்றும் திரிபடைந்த டெல்டா தொற்று பரவும் வீதம் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளது.

