Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் புதிய விதிமுறைகளுக்கு நீதிமன்றம் தடை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 6, 2021 • 5:37 PM

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் புதிய விதிமுறைகளுக்கு நீதிமன்றம் தடை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதியின் உத்தரவு அமுல்படுத்தப்படுவதனை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு ஊடகவியலளார்கள் சிலரும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
  • மேலும், தனிநபர் சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உரிமை மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்கு கடுமையாக அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
  • மர்து பெர்னாண்டோ, யசந்த கோட்கொட மற்றும் அசல வெங்கப்புலி ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை பரிசீலனை செய்தது.
எழுத்து அளவு:

ஜனாதிபதியின் உத்தரவு அமுல்படுத்தப்படுவதனை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு ஊடகவியலளார்கள் சிலரும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி  பாக்கியசோதி சரவணமுத்து, ஊடகவியலாளர்களான லக்னாத் ஜயகொடி, காவிந்தியா கிறிஸ்டோபர் தோமஸ் மற்றும் செயற்பாட்டாளர் ஷ்ரின் சரூர் ஆகியோர் தாக்கல் செய்த மனு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு, இந்த தடை உத்தரவு எதிர்வரும் 24ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மர்து பெர்னாண்டோ, யசந்த கோட்கொட மற்றும் அசல வெங்கப்புலி ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை பரிசீலனை செய்தது.

1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மார்ச் 12 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்ட   2218/68 / 2021 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, சட்டத்தின் பத்தி 27 இன் கீழ், "கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்கும் உத்தரவு" என்ற தலைப்பில் ஒரு விதிமுறை அறிவிக்கப்பட்டது.

அந்த விதிமுறைகளின் கீழ், எந்தவொரு நீதித்துறை செயன்முறை அல்லது சான்றுகள் இல்லாமல் எவரையும் கைது செய்து புனர்வாழ்வு என்ற பெயரில் தடுத்து வைக்க முடியுமென மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், தனிநபர் சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உரிமை மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்கு கடுமையாக அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த விதிமுறைகள் அரசியலமைப்பின் பிரிவு 10, 11, 12.1, 12.2, 13.1, 13.2, 13.4, 13.5, 13.6, 13.1 (பி), 14.1 (ஈ) மற்றும் 17 ஆகியவற்றை நேடியாக மீறுவதால், இந்த மனுவை விசாரணைக்கு எடுப்பதோடு,   தொடர்புடைய விதிமுறைகள், தங்களின் மற்றும் நாட்டின் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அமைந்துள்ளதால், இந்த விதிமுறைகள் அமுல்படுத்தப்படுவதை  தடுக்கும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

புதிய விதிமுறைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு முறையாக நிறைவேற்றப்பட்டதா என்றும் மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பில் விரான் கொரெயா, சுரேன் பெர்னாண்டோ, புலஸ்தி ஹேவமான்ன மற்றும் மஞ்சுள பாலசூரிய ஆகியோர் முன்னிலையாகினர், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே மற்றும் அரச தரப்பு சட்டத்தரணி அவந்தி பெரேரா ஆகியோர் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகினர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...