தற்போது நிலவும் மழை உடனான வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த முதலாம் கட்ட நிலச்சரிவு எச்சரிக்கையை (மஞ்சள் – விழிப்புடன் இருங்கள்) தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீடித்துள்ளது.
அதற்கமைய, இவ்வச்சரிக்கையானது நாளை (ஒக்டோபர் 31) பிற்பகல் 4:00 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
இவ் எச்சரிக்கை பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குப் பொருந்தும்:
-
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ கோரளை
-
இரத்தினபுரி மாவட்டம்: ஆயகம, ஓபநாயக்க, எலபாத்த, குருவிற்ற, பெல்மடுல்ல மற்றும் இரத்தினபுரி
-
கண்டி மாவட்டம்: உடுநுவர மற்றும் யட்டிநுவர
-
கேகாலை மாவட்டம்: அரநாயக்க, யட்டியாந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய மற்றும் மாவநல்லை
மேலதிகத் தகவல் மூல இணைப்புகள்:


