Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்கள்​ கைது! மூவறுக்கு பினை

T

The Leader Desk

ஆகஸ்ட் 6, 2021 • 3:12 PM

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்கள்​ கைது! மூவறுக்கு பினை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சந்தேகநபர்கள் இருவரையும் கடுவலை பிரதம நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • பொருப்பனை வீதியில் அமைந்துள்ள நான்காவது பொறியியலாளர் பிரிவு இராணுவப் படைத்தளத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதித் தடையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • கைதுக்கான காரணத்தை அவர் வினவிய போது, அநாவசிய ஒன்றுகூடல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

சந்தேகநபர்கள் இருவரையும் கடுவலை பிரதம நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Stein கலையகத்தில் இடம்பெற்ற ”மாவத்த” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய வசந்த முதலிகே இரத்மலானை – பொருப்பனை பகுதியில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

பொருப்பனை வீதியில் அமைந்துள்ள நான்காவது பொறியியலாளர் பிரிவு இராணுவப் படைத்தளத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதித் தடையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுக்கான காரணத்தை அவர் வினவிய போது, அநாவசிய ஒன்றுகூடல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவருடன் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்கள் மூன்று பேர் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்பான வழக்கு கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாரேனும் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு போதுமான குற்றச்சாட்டுகள் காணப்பட்டால் மாத்திரமே கைது செய்ய முடியும் என அறிவித்த நீதவான், நாட்டிலுள்ள பொதுமக்களை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்த வேண்டாம் எனவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...