Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

வீட்டிற்குச் சென்று தடுப்பூசி போடுங்கள்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 7, 2021 • 7:32 AM

வீட்டிற்குச் சென்று தடுப்பூசி போடுங்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேலும், 30 வயதிற்கு மேற்பட்டவர்கள இன்னும் தடுப்பூசி போடவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு செல்லுமாறு இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொள்கிறார்.
  • இதற்கிடையில், ஜனாதிபதி நேற்று சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.30 வயதுக்கு மேற்பட்ட எவரும் இரண்டாவது மருந்தை செலுத்தும் எந்த மையத்திலிருந்தும் முதல் டோஸைப் பெற வசதி செய்ய வேண்டும்.
  • மூன்றாவது டோஸுக்கு கூட அரசாங்கம் தயாராக உள்ளது என்றார்.
எழுத்து அளவு:

மேலும், 30 வயதிற்கு மேற்பட்டவர்கள இன்னும் தடுப்பூசி போடவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு செல்லுமாறு இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொள்கிறார்.

இதற்கிடையில், ஜனாதிபதி நேற்று சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.30 வயதுக்கு மேற்பட்ட எவரும் இரண்டாவது மருந்தை செலுத்தும் எந்த மையத்திலிருந்தும் முதல் டோஸைப் பெற வசதி செய்ய வேண்டும்.

அது தடுப்பூசி மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்த கொவிட் ஒழிப்பு சிறப்பு குழுவினருடனான கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் இரண்டு தடுப்பூசிகளும் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டினார்.

மூன்றாவது டோஸுக்கு கூட அரசாங்கம் தயாராக உள்ளது என்றார்.

எனினும், நோய் பரவுவதைத் தடுக்க பொதுமக்களின் ஆதரவு இல்லாதது துரதிருஷ்டவசமானது என்று வைத்தியர் பிரசன்ன குணசேன கூறினார்.

தடுப்பூசி பெற 50,000 இலவச பயணங்கள்

இதற்கிடையில், தடுப்பூசி திட்டத்தை வலுப்படுத்த போக்குவரத்து சிரமம் உள்ளவர்களுக்கு 50,000 இலவச பயணங்கள் வழங்குவதற்கான பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய இலங்கை செஞ்சிலுவை சங்கம் (SLRCS) மற்றும் Uber Sri Lanka (UBER SRI LANKA) இணங்கியுள்ளன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் கொவிட் சிகிச்சை கடமைகள் குறித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான இலவச போக்குவரத்துத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தின் போது உடன்பாடு எட்டப்பட்டது.

(UBER SRI LANKA) மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க தலைமையில், திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமருக்கு விளக்கமளித்தனர்.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வீட்டிற்குச் சென்று தடுப்பூசி போடுங்கள்! | Tamil Leader | We Lead the Nation