Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

கவிஞர் அஹ்னாஃப் ஜசீம் தடுத்து வைக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து சட்டத்தரணிகளுக்கு சந்திக்கும் வாய்ப்பு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 6, 2021 • 5:52 PM

கவிஞர் அஹ்னாஃப் ஜசீம் தடுத்து வைக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து சட்டத்தரணிகளுக்கு சந்திக்கும் வாய்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கைது செய்யப்பட்ட அஹ்னாஃப் ஜசீம் கவிஞர் சார்பில் அவரது சட்டத்தரணி, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர், பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
  • சந்தேகநபர் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளதாகவும், தடுப்புக்காவல் உத்தரவு நிறைவடைந்த பின்னர், நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாகவும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிகசொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே தெரிவித்துள்ளார்.
  • முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிபதிகள் குழாம், அஹ்னாஃப் ஜசீமை சந்திக்க அனுமதிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, செப்டெம்பர் 8ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எழுத்து அளவு:

மன்னார் தமிழ் வாசகர்களால் நன்கு அறியப்பட்ட இளம் கவிஞர் அஹ்னாப் ஜசீம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான “நவரசம்” எனும் நூல் ஊடாக மாணவர்களை 'தீவிரவாத சித்தாந்தங்களை' பின்பற்றுபவர்களாக மாற்றும் முயற்சியில் “தீவிரவாத” விடயங்களை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டார்.

Navarasam

கடந்த வருடம் மே மாதம் 16ஆம் திகதி கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல், பொலிஸில் தடுத்து வைத்திருக்கும் தன்னை விடுவிக்கக் கோரி அஹ்னாப் ஜசீம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, கடந்த 4ஆம் திகதி, நீதிபதிகளான முர்து பெர்னாண்டோ, யசந்த கோடேகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அஹ்னாஃப் ஜசீம் கவிஞர் சார்பில் அவரது சட்டத்தரணி, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர், பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் தொடர்பில் ஆலோசனை பெற தனது வாடிக்கையாளரை சந்திக்க சென்ற போதிலும், அது வெற்றியளிக்கவில்லை என, ஜனாதிபதி சட்டத்தரணி கே.எஸ் கனகஈஸ்வரன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளதாகவும், தடுப்புக்காவல் உத்தரவு நிறைவடைந்த பின்னர், நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாகவும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிகசொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் ஜசிமின் அடிப்படை உரிமை மனு தொடர்பில் சட்டமா அதிபர் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிபதிகள் குழாம், அஹ்னாஃப் ஜசீமை சந்திக்க அனுமதிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, செப்டெம்பர் 8ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...