Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

உரப்பையில் கட்டப்பட்ட நிலையில் வாழைச்சேனையில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 7, 2021 • 10:27 AM

உரப்பையில் கட்டப்பட்ட நிலையில் வாழைச்சேனையில் பெண் ஒருவர்  சடலமாக மீட்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனது வர்த்தக நிலையத்தில் வைக்கப்பட்ட பொதியில் சந்தேகம் கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற வேளை அந்தப் பெண்ணின் குடும்ப உறவினர்களும் அந்த உரப் பையை கடையில் வைத்த நண்பரும் பொலிஸ் நிலையத்தில் இருந்துள்ளனர்.
  • கொலை செய்யப்பட்ட குடும்பப் பெண் வாழைச்சேனை அல்லாப்பிச்சை வீதியை சேர்ந்த முகம்மட் ஹனீபா சித்தி லைலா என்ற 55 வயதுடையவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
  • இப்பெண்ணிடம் கொலையாளி நகையை பெற்று அடகு வைத்ததாகவும் அதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதையடுத்து நகையை மீட்டுத் தருவதாக கொலையாளி கூறி பெண்ணை வியாழக்கிழமை காலை 11 மணியளவில் அழைத்து சென்றுள்ளார்.
எழுத்து அளவு:

வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உரப் பையில் கட்டப்பட்ட பொதியை நண்பர் ஒருவர் கொண்டு வந்து வைத்துவிட்டு பத்து நிமிடத்தில் எடுத்துக் கொள்வதாக சொல்லி விட்டு சென்றதாகவும், திரும்ப வராத காரணத்தினால் வர்த்தக நிலைய உரிமையாளர் சந்தேக நபருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த போது அதை வைத்துக் கொள்ளுங்கள் நான் வருகிறேன் என்று தெரிவித்துள்ளதாகவும் அந்த வர்த்தகர் தெரிவித்துள்ளார்.

தனது வர்த்தக நிலையத்தில் வைக்கப்பட்ட பொதியில் சந்தேகம் கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற வேளை அந்தப் பெண்ணின் குடும்ப உறவினர்களும் அந்த உரப் பையை கடையில் வைத்த நண்பரும் பொலிஸ் நிலையத்தில் இருந்துள்ளனர். வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் படி சந்தேக நபரும், வர்த்தக நிலைய உரிமையாளரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட குடும்பப் பெண் வாழைச்சேனை அல்லாப்பிச்சை வீதியை சேர்ந்த முகம்மட் ஹனீபா சித்தி லைலா என்ற 55 வயதுடையவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். இப்பெண்ணிடம் கொலையாளி நகையை பெற்று அடகு வைத்ததாகவும் அதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதையடுத்து நகையை மீட்டுத் தருவதாக கொலையாளி கூறி பெண்ணை வியாழக்கிழமை காலை 11 மணியளவில் அழைத்து சென்றுள்ளார். சென்றவர் மாலையாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர்.

அந்தப் பெண்ணை ஓட்டமாவடி எம்.பி.சீ.எஸ் வீதிலுள்ள சந்தேக நபரின் அலங்கார மீன் வளர்ப்பு கடைக்கு அழைத்து சென்று அங்கு வைத்து கொலை செய்து உரப்பையில் போட்டு முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று சடலத்தை தடையம் இல்லாமல் செய்யும் நோக்கிலும் சந்தேகம் ஏற்படாத வண்ணமும் வாழைச்சேனையிலுள்ள நண்பரொருவரின் வளர்ப்பு மீன் கடையில் பெண்ணின் சடலத்தை வைத்து இரவு வேளையில் எடுத்துச் செல்லும் வகையில் வைத்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல், சம்பவ இடத்துக்கு வருகை தந்து கொலை செய்யப்பட்ட வர்த்தக நிலையம் மற்றும் சடலம் இருந்த வர்த்தக நிலையம் என்பவற்றை பார்வையிட்டதுடன், பெண்ணின் சடலத்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பிரிவினர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் சானக வென்கம, வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஜெயசுந்தர, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பொலிஸார் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

உரப்பையில் கட்டப்பட்ட நிலையில் வாழைச்சேனையில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு! | Tamil Leader | We Lead the Nation