Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

உள்ளுர் உற்பத்தியை மீளக் கொண்டுவர முயற்சி! அனுராதா ஜகம்பத்

T

The Leader Desk

ஆகஸ்ட் 7, 2021 • 10:06 AM

உள்ளுர் உற்பத்தியை மீளக் கொண்டுவர முயற்சி! அனுராதா ஜகம்பத்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த உலகில் மூன்றாம் உலக யுத்தம் நிகழுமாக இருந்தால் அதற்குக் காரணம் காலநிலை மாற்றமாகவே இருக்கும்.
  • எதிர்கால பிள்ளைகளைப் பற்றி சிந்திக்காமல் இத்தனை ஆண்டு காலம் அவர்களின் எதிர்காலத்தைச் சிதைத்துள்ளோம் 43 வீதமாக இருந்த உள்ளுர் உற்பத்தி தற்போது 7.5 வீதமாக மாறியுள்ளது.
  • கிழக்கு மாகாணத்தில் சுமார் 07 இலட்சத்திற்கும் மேல் கால்நடைகள் இருக்கின்றன.
  • ஆனால் துரதிஸ்டவசமாக நூற்றுக்கு ஐந்து வீதம் தான் அவற்றிலிருந்து சாணக் கழிவினைப் பெறக் கூடியதாக இருக்கின்றது.
எழுத்து அளவு:

இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையில் இடம்பெற்ற “செழுமையான கிழக்கு நிலைபேறான விவசாயக் கலாச்சாரம்” என்னும் தொனிப்பொருளிலான உள்ளுராட்சி மன்றங்களின் மூலம் சேதனப் பசளை உற்பத்தியினை மேம்படுத்தல் செயற்திட்டம் தொடர்பில் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த உலகில் மூன்றாம் உலக யுத்தம் நிகழுமாக இருந்தால் அதற்குக் காரணம் காலநிலை மாற்றமாகவே இருக்கும். இரசாயண உரங்களைப் பயன்படுத்தி நிலத்தையும், வளிமண்டலத்தையும் மாசுபடுத்தி காலநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளோம். எதிர்கால பிள்ளைகளைப் பற்றி சிந்திக்காமல் இத்தனை ஆண்டு காலம் அவர்களின் எதிர்காலத்தைச் சிதைத்துள்ளோம்

43 வீதமாக இருந்த உள்ளுர் உற்பத்தி தற்போது 7.5 வீதமாக மாறியுள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் நிரந்தரமான விவசாயக் கலாசாரத்தைத் தேற்றுவிக்க வேண்டும். நாங்கள் பின்நேக்கிச் செல்லவில்லை நிலைபேறான விவசாய உற்பத்தியில் முன்நோக்கிச் செல்வதற்கான ஆரம்பத்தில் நிற்கின்றோம். நாங்கள் ஒரேடியாக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இரசாயணத்தில் விடுபடுவதற்காக நீண்ட கால திட்டங்களை உலகம் வகுத்து வருகின்றது. ஆனால் நாங்கள் எங்களிடம் இருந்த, எங்களிடமிருந்து மறைந்த விவசாயக் கலாச்சாரத்தை மீளக் கொண்டு வர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

எமக்கு பாரிய வளமாக வனங்கள் இருக்கின்றன வனங்களையும் பாதுகாத்துக் கொண்டு விவசயத்தையும் வென்றெடுக்கும் திட்டங்களைச் செய்து வருகின்றோம். பொருளாதார ரீதியான திருப்தியோடு மன ரீதியான திருப்தியையும் ஏற்படுத்தும் விதத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கால்நடைகளை முறையான பராமரிப்பின் மூலம் அத்தியாவசியமான இயற்கை உரம் மற்றும் உயிரியல் வாயு என்பவற்றைப் பெற்றுக் கொள்ளலம். இருக்கும் சொத்துக்களில் இருந்து பயனைப் பெறுவதற்கான புத்தியைப் பெற்றிருக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் சுமார் 07 இலட்சத்திற்கும் மேல் கால்நடைகள் இருக்கின்றன. ஆனால் துரதிஸ்டவசமாக நூற்றுக்கு ஐந்து வீதம் தான் அவற்றிலிருந்து சாணக் கழிவினைப் பெறக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான நிலைமகளை மாற்றி வளத்தை முறையான பயன்படுத்தி பயனைப் பெற வேண்டும். இதற்காக விவசாய வனம், வீட்டுத்தோட்டம், நிலையான பால்பண்ணை போன்ற வடிவங்களிலான திட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறான செயற்திட்டங்களுக்கு அரசியலாளர்களுக்கும் பொறுப்புகள் இருக்கின்றன. வாக்களிப்பிற்காக மாத்திரம் மக்களைப் பயன்படுத்தாமல் இவ்வாறான விவசாய நடவடிக்கைகளுக்கான ஊக்குவிப்புகளையும் செய்ய வேண்டும்.

கழிவுகளின் மூலம் உரம் தயாரிக்கும் போது இரசாயணம் அற்ற இவ் உரம் மக்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாக மாறும். இதன் மூலம் அவ் உரத்திற்கு அதிக தேவைப்பாடும் எழும். இதனால் தான் உள்ளுராட்சி சபைகள் இவ்விடயத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற செயற்திடடத்தை உருவாக்கியுள்ளோம். ஏனெனில் கழிவுகள் அதிகம சேகரிக்கும் பிரிவாக இவை காணப்படுகின்றன. எனவே இவற்றின் மூலம் சேதனைப் பசளை உற்பத்தியினை மேற்கொள்வது மிகவும் இலகுவாக இருக்கும்

நாங்கள் இனம் மதம் கலாச்சாரம் ரீதியில் வேறுபட்டிருந்தாலும். எம் அனைவருக்கும் ஒரு பொதுப் புண்ணியமாக இருப்பது இந்த நிலம். மக்களாகிய நாங்கள் இந்த பூமியை செழிப்பாக ஆக்குவது எங்கள் ஒவ்வொருவரின் கடமை. மனிதன் என்ற அடிப்படையில் நாம் முரண்படாமல்

இந்த மண்ணில் பிறந்த மக்கள் என்ற அடிப்படியில் இந்த மண்ணை வளமாக்கி உலகத்தில் முன்மாதிரியான நாடாக எமது நாட்டை மற்ற வேண்டும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

உள்ளுர் உற்பத்தியை மீளக் கொண்டுவர முயற்சி! அனுராதா ஜகம்பத் | Tamil Leader | We Lead the Nation