Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இந்தியாவின் காட்சி இலங்கையில் அரங்கேறுகிறதா?

T

The Leader Desk

ஆகஸ்ட் 6, 2021 • 3:31 PM

இந்தியாவின் காட்சி இலங்கையில் அரங்கேறுகிறதா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பு மாநகர எல்லைக்குள் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களில், 75 சதவீதம் பேருக்கு டெல்டா திரிபு தொற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
  • குறிப்பாக ஜுலை முதல் வாரத்தில் 19.3 சதவீதமாக இருந்த டெல்டா திரிபு, இறுதி வாரத்தில் 75 வீதம் வரை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
  • இதுவரை இல்லாத அளவில் 94 கொரோனா மரணங்கள் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 4) ஒரே நாளில் பதிவானதாக, சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,821ஆக அதிகரித்துள்ளது.
எழுத்து அளவு:

கொழும்பு மாநகர எல்லைக்குள் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களில், 75 சதவீதம் பேருக்கு டெல்டா திரிபு தொற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

டாக்டர் சந்திம ஜீவந்தர தனது டுவிட்டர் தளத்திலேயே இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக ஜுலை முதல் வாரத்தில் 19.3 சதவீதமாக இருந்த டெல்டா திரிபு, இறுதி வாரத்தில் 75 வீதம் வரை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவில் 94 கொரோனா மரணங்கள் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 4) ஒரே நாளில் பதிவானதாக, சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,821ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 321,429 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிக்கின்றது.

மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை

இலங்கையிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் அவசர நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் படுக்கைகள் கோவிட் தொற்றியோரால் நிரம்பியுள்ளதுடன், பெரும்பாலான நோயாளிகள் மருத்துவமனைகளின் அனைத்து இடங்களிலும் தங்கியுள்ளனர்.

இரத்தினபுரி, கராபிட்டிய, எம்பிலிபிட்டிய உள்ளிட்ட இடங்களில் உள்ள பல மருத்துவமனைகளில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை வரும் திங்கட்கிழமை முதல் நோய் அறிகுறிகள் தென்படாத கோவிட் தொற்றாளர்களை, அவர்களது வீடுகளிலேயே வைத்து சிகிச்சைகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்;மானித்துள்ளது.

இலங்கையை உலுக்கும் கொரோனா மூன்றாவது அலை

பயணத் தடையை மீறிய பொதுமக்களை முட்டியிட வைத்த இலங்கை ராணுவத்தினர்

இந்நிலையில், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுக்கிறது.

நாட்டில் தற்போது பரவிவரும் வைரசை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது குறித்து கலந்துரையாடல்களை நடத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று கோவிட் தடுப்பு செயலணி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் திலக்ஷனி மதுவந்தியின் பதிவு

இலங்கையின் பிரபல சிங்கள ஊடகவியலாளரான திலக்ஷனி மதுவந்தியின் பேஸ்புக் பதிவு, நாட்டின் பேசுப்பொருளாக தற்போது மாறியுள்ளது.

''இந்தியா தொடர்பில் நான் வாசித்த செய்தியை, தற்போது எனது இரு கண்களினால் காண்கின்றேன்" என அவர் மருத்துவமனையிலிருந்து பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

அதிகாலை 1:20 மணியளவில் களுபோவில மருத்துவமனையின் கொரோனா வார்டின் நிலைதான் இது.

வார்டில் ஒரு படுக்கையில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகள். அவர்கள் தீவிர நோய்வாய்ப்பட்டவர்கள்.

வார்டில் உள்ள படுக்கைகளின் கீழ், மற்றவர்கள் உயிருக்கு போராடி, ஆக்சிஜன் வாயு விநியோகிக்கப்பெறுகிறார்கள்".

நோயாளிகள் தரையில் நடக்க பயப்படுகிறார்கள்

"மீதமுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நோயாளிகள் நீண்ட இருக்கைகளிலும், நாற்காலிகள், மரங்களின் கீழும் படுத்திருக்கிறார்கள்.

கொரோனா தடுப்பூசி மையம் ஒன்று.

மணல் தரையில் ஒரு போர்வையுடனும் அதுவும் இல்லாமல் நோயாளிகள் படுத்திருப்பதை காணமுடிகின்றது.

குளிரிலும் நுளம்பு (கொசுக்) கடியிலும், இந்த மக்கள் அனைவரும் கொரோனாவை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

இன்று காலை கூட, அனுமதிக்கான வரிசை மிக நீண்டதாகவே காணப்படுகிறது.

நான் என் தாயை நாற்காலியில் அமர்த்தினேன்.

என் கண்முன்னே சில மணி நேரத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் ஊழியர்கள் குறைவாகவே உள்ளனர்.

அவர்கள் சோர்வடையாமல் தெய்வத்தைப் போலவே தங்கள் கடமையைச் செய்கிறார்கள்.

என் அம்மா இதுபோன்று கொரோனாவுடன் போராடும்போது, என் தந்தை பல நாட்களாக ஆக்சிஜன் வாயு இயந்திரத்திற்கு காத்திருக்கிறார்.

இந்த வாழ்க்கையில் அனுபவிக்க இனி இதனைவிட எந்த வலியும் இல்லை.

இதை விட உதவியற்ற நிலை எதுவுமில்லை.

நாளை எனக்கும் தொற்று ஏற்படும்.

நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

உங்களால் முடிந்தவரை கவனமாக இருங்கள்.

அனைத்து குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று அந்தப் பதிவு நீள்கிறது.

ஊடகவியலாளர் திலக்ஷனி மதுவந்தியின் இந்த பதிவு நேற்றும், இன்றும் அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இந்தியாவின் காட்சி இலங்கையில் அரங்கேறுகிறதா? | Tamil Leader | We Lead the Nation