Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இலங்கையில் மீண்டும் கொரோனா பரவ அரசாங்கத்தின் முட்டாள் தனமான முடிவுகளே காரணம்! சம்பிக்க

T

The Leader Desk

ஆகஸ்ட் 8, 2021 • 5:04 AM

இலங்கையில் மீண்டும் கொரோனா பரவ அரசாங்கத்தின் முட்டாள் தனமான முடிவுகளே காரணம்! சம்பிக்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்தியா, ரஷ்யா மற்றும் உக்ரேனிலிருந்து சுற்றுலாப்பயணிகள் அழைத்து வரப்பட்டமையே இலங்கையில் டெல்டா பரவல் தீவிரமடைய பிரதான காரணமாகும்.
  • இதனை விட பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாகக் கூறிய அரசாங்கம், நாளாந்தம் 3000 பேர் உயிரிழந்த யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த எமது இது ஒரு பாரிய பிரச்சினையல்ல என்றும் கூறியது.
  • எனவே தற்போது இது தொடர்பில் புலனாய்வு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவகபாட்டாளி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்தார்.
எழுத்து அளவு:

இந்தியா, ரஷ்யா மற்றும் உக்ரேனிலிருந்து சுற்றுலாப்பயணிகள் அழைத்து வரப்பட்டமையே இலங்கையில் டெல்டா பரவல் தீவிரமடைய பிரதான காரணமாகும். எனவே தற்போது இது தொடர்பில் புலனாய்வு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவகபாட்டாளி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்தார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் நான்காவது அலை கட்டுப்பாட்டை மீறி முழு நாடும் பாரதூரமான நிலைமையை அடைந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜனவரியில் கொவிட் பரவல் தொடர்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்த போது அரசாங்கம் அதனை கேலிக்குள்ளாக்கியது.

இதனை விட பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாகக் கூறிய அரசாங்கம், நாளாந்தம் 3000 பேர் உயிரிழந்த யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த எமது இது ஒரு பாரிய பிரச்சினையல்ல என்றும் கூறியது. அரசாங்கத்தின் இவ்வாறான அசமந்த போக்கே நாடு தற்போதுள்ள நிலைமைக்கு காரணமாகும்.

அரசாங்கத்தின் முட்டாள் தனமான முடிவுகளும் , வியாபார நோக்கமும் , அரசியல் நோக்கமும் இந்த பாரதூமான விளைவுகளுக்கான காரணம் ஆகும். இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்றார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...