Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

கோத்தா-மகிந்த ஆட்சிக்கு எதிராக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஊடக அறிக்கை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 6, 2021 • 3:03 PM

கோத்தா-மகிந்த ஆட்சிக்கு எதிராக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஊடக அறிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவை மட்டுமன்றி மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு எதனையும் வழங்க முடியாது நிற்கின்றது.அதேவேளை நீண்ட காலமாக இருந்துவரும் ஆசிரியர்-அதிபர்களின் சம்பள முரண்பாட்டிற்குரிய தீர்வினைக் கொண்டுவர ஆட்சியினர் விடாப்பிடியாக மறுத்தும் வருகிறனர்.
  • அதே போன்று போராட்டங்களில் பங்கு கொண்ட 48 ஆசிரியர்-அதிபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
  • மேலும் அவ்வறிக்கையில், அன்று ஜே.ஆர் தொடக்கி வைத்த தனிநபர் தனிக் கட்சி சர்வாதிகாரத்தை அதன் தொடர்ச்சியில் ராஜபக்க்ஷக்கள் தமது குடும்ப ஆட்சியாக முன்னெடுத்து வருகிறார்கள்.
எழுத்து அளவு:

இவை மட்டுமன்றி மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு எதனையும் வழங்க முடியாது நிற்கின்றது.அதேவேளை நீண்ட காலமாக இருந்துவரும் ஆசிரியர்-அதிபர்களின் சம்பள முரண்பாட்டிற்குரிய தீர்வினைக் கொண்டுவர ஆட்சியினர் விடாப்பிடியாக மறுத்தும் வருகிறனர்.

இந் நிலையில் விவசாயிகள் தொழிலாளர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள்- அதிபர்கள் புத்திஜீவிகள் வீதியில் இறங்கி வெகுஜன எழுச்சிப் போராட்டங்களில்பங்கு கொண்டு வருகிறார்கள். இவற்றை நசுக்கி ஒடுக்குவதற்கு அரசாங்கம் தனது பொலீஸ் அடக்குமுறையினைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அதன் காரணமாக மக்கள் போராட்டங்களில் முன்நின்ற முன்னிலை சோஷலிசக் கட்சியின் தோழர்களான சமீர கொஸ்வத்த , கோசிலா ஆகியோரை பொலீஸ் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

அதே போன்று போராட்டங்களில் பங்கு கொண்ட 48 ஆசிரியர்-அதிபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொலீஸ் அடக்கு முறையினையும் போராட்டங்களில் பங்கு கொள்வோர் மீதான அராஜக நடவடிக்கைகளையும் எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.அத்துடன் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது என கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்தி வேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில், அன்று ஜே.ஆர் தொடக்கி வைத்த தனிநபர் தனிக் கட்சி சர்வாதிகாரத்தை அதன் தொடர்ச்சியில் ராஜபக்க்ஷக்கள் தமது குடும்ப ஆட்சியாக முன்னெடுத்து வருகிறார்கள். பதவிக்கு வருவதற்காக மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை வழங்கியதுடன் தேசிய இனங்களைப் பகைவர்களாகச் சித்தரித்தே கோதா-மகிந்த தலைமையிலான பொதுசன பெரமுனை ஆட்சிக்கு வந்தது.ஆனால் நிறைவேற்று  அதிகாரமும் பாராளுமன்றப் பெரும்பான்மையும் கிடைத்ததன் மூலம் தமது குடும்ப சர்வாதிகாரத்தை ராணுவமயப்படுத்தலுக்கு ஊடாக முன்னெடுப்பதிலேயே முனைப்புக்காட்டி வருகின்றனர். அவற்றுக்கான சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள முன்நிற்கிறார்கள்.

அதேவேளை விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்குவதிலும் தொழிலாளர்களைச் ஒட்டச் சுரண்டுவதற்கும் ஆட்சியினர் முழு ஆதரவையும் வழங்கி நிற்கிறார்கள். அதே வேளை தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கு எதிரான பேரினவாத செயற்பாடுகளை முன்னெடுத்து சிங்கள மக்களைத் திசைதிருப்பும் செய்கிறார்கள்.ஆனால் இவற்றை எல்லாம் கடந்தே அனைத்து மக்களும் வீதியில் இறங்கியே நியாயமான தமது கோரிக்கைகளுக்காகப் போராடி வருகிறார்கள். எனவே அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட்டங்களில் இறங்கி உறுதியுடன் முன் செல்வது மட்டுமே ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்கான ஓரே பாதையாகும் என்பதையே தொடரும் மக்கள் போராட்டங்கள் எடுத்துக் காட்டி வருகின்றன.

சி.கா.செந்திவேல்

பொதுச் செயலாளர்.

பு.ஜ.மா.லெ.கட்சி.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...