இலங்கைக்கான இந்திய தூதுவராலயத்தின் மீது தாக்குதல் நடக்கப் போவதாக தூதுவராலயத்திற்கு தகவலளித்த குற்றத்திற்காக முன்னாள் விமானப்படை அதிகாரியொருவர் கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட நிபுணர்களின் பரிந்துரைகளை ஏற்று, அரசாங்கம் நாட்டை முழுமையாக முடக்க வேண்டுமெனவும் கஷ்டப்படும் மக்கள் விடயத்தில் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது அத்தியாவசியமாகுமெனவும் முன்னிலை சோஷலிஸக் கட்சி கூறுகிறது.

கொவிட் தொடர்பான புள்ளிவிவரங்களை மாற்றி ஜனாதிபதி மக்களின் உயிர்களுடன் விளையாடி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

திலித் ஜயவீரவிற்கு சொந்தமாக ‘லிபர்டி பப்லிஷர்ஸ்’ பத்திரிகை நிறுவனத்தின் தமிழ் பத்திரிகையான ‘தமிழன்’ பத்திரிகையின் ஆசிரியரான ஆர். சிவராஜ் அவர்களின் வீட்டிற்கு கடந்த 11ம் திகதி நள்ளிரவு குற்ற விசாரணைத் திணைக்களத்திலிருந்து எனக் கூறி சிலர் நுழைய முயன்றுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள புதிய விதிமுறைகளை கடுமையாக விமர்சித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அதனை மீளப் பெறுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரியுள்ளது.

11 பேரை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பிலான வழக்கில்  முன்னாள் கடற்படைத் தலைவரை விடுவிக்க சட்டமா அதிபர் கப்பம் பெற்றுள்ளதாக மனித உரிமை குழு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக நடத்தப்பட்ட பிசிஆர் சோதனை மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவர் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைக்கப்பட்ட புதிய நிறுவனமொன்றை ஆரம்பித்து அதனூடாக எல்.பி. எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்காக எரிசக்தி அமைச்சர் சட்டத்தரணி உதய கம்மன்பிலவிற்கு அதிகாரத்தை ஒப்படைக்க கடந்த 9ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக செய்திகள்

இன்று (13) நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நீதிபதிகள் அழைக்கப்பட்டு நடாத்தப்பட்ட வெபினார் கருத்தரங்கில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டமை சம்பந்தமாக நீதித் துறையினதும், சட்டத் துறையினதும் கவனம் திரும்பியுள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி