2022ஆம் ஆண்டில் எதிர்கொண்ட

துன்பங்களை மறவாது, சரியான தீர்மானத்தை எடுத்து தமது எதிர்காலத்திற்கான பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட்ட வேளையில் தானே அவரையும் ஐக்கிய தேசிய கட்சியையும் பாதுகாத்து முன்னோக்கி கொண்டுச் சென்றதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மயிரிழையில் உயிர்தப்ப தானே காரணமெனவும் அவர் தெரிவித்தார்.

தெல்கொட பிரதேசத்தில் நேற்று (17) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தனது அரசியலை ஆரம்பித்த பியகமவில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தி குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதன் பலன்களை இன்று அரசியல்வாதிகள் மட்டுமன்றி அனைவரும் அனுபவிக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார். 

பியகமவை அபிவிருத்தி செய்த பாணியிலேயே நாடு முழுவதும் வர்த்தக வலயங்களை ஆரம்பித்து முழு நாட்டையும் அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதே தனது நோக்கமென ஜனாதிபதி தெரிவித்தார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி