இன்று (13) நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்தார்.

விவசாயம், துறைமுகம், ஆடை கைத்தொழில் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த பயணத்தடை பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த துறைகளை சார்ந்தவர்களை பணி இடங்களுக்கு அழைப்பது தொடர்பில் நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் இராணுவத் தளபதி கூறினார்.

இதேவேளை, செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், பொது இடங்களில் நடமாடும் போது, இரண்டு COVID தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும் அட்டையை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி