தகவல் தொழில்நுட்பத்தின்

ஊடாக பொருளாதாரத்துக்கு ஐந்து பில்லியன் டொலர்களை ஈட்டும் இலக்கு தம்மிடம் இருப்பதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐந்து இலட்சம் மென்பொருள் பொறியாளர்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அனுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
"நாம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும், அதை பெரிதாக்க சிறிது காலம் எடுக்கும். ஆனால் உடனடியாக சுற்றுலாத்துறையில்  புத்துயிர் அடைய செய்யலாம்.
 
08 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்க 40 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதாகும்.
 
அடுத்தது தகவல் தொழில்நுட்ப துறை
 
இப்போது  1.2 பில்லியன் டொலராக இருக்கும் ஏற்றுமதி பொருளாதாரத்தை 05 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க நாட்டில் 2 இலட்சம் மென்பொருள் பொறியியலாளர்களை உருவாக்க உள்ளோம். பெண்கள், பணி பெண்களாக வௌிநாடு செல்வதை நிறுத்த வேண்டும்.
 
மேம்பட்ட மனித வளத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
 
நாட்டை விட எட்டு மடங்கு கடல் உள்ளது. இன்று, 50 சதவீத நெடுநாள் படகுகள் கரையில் குவிந்துள்ளன.
 
அதிகளவு எரிபொருளுடன் 40 நாட்கள் கடலில் இருந்து அந்த அளவு உணவை எடுத்துக் கொண்டு மீன் பிடித்தால் 5 முதல் 10 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.
 
எனவே, மீனவர்களுக்கு மானியம் வழங்கி, அந்த படகுகளை கடலுக்கு அனுப்ப திட்டம் வகுக்க வேண்டும்.
 
இந்த நாட்டு விவசாயிகள் நம் நாட்டுக்குத் தேவையான வெங்காயத்தை உற்பத்தி செய்யத் தயாராக உள்ளனர். எனவே வெளிநாட்டிலிருந்து வெங்காயத்தை  இறக்குமதி செய்வதை நிறுத்துவேன் என உறுதியளிக்கிறேன்.
 
சுற்றுலாத் தொழிலுக்குத் தேவையான அரிசி மட்டுமே வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும். வெளிநாட்டில் இருந்து வேறு எந்த அரிசியையும் கொண்டு வர மாட்டோம்" என்றார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி