முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக நடத்தப்பட்ட பிசிஆர் சோதனை மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவர் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் தன்னை சந்திக்க பாணந்துறையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த பலர் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அவரது வீட்டில் உள்ள ஊழியர்களும் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

அமைச்சர் பிரசன்ன, மற்றும் அவரது இரண்டு செயலாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிரம்பு, பித்தளை, களிமண், மற்பான்டங்கள் மற்றும் கிராமப்புற தொழில்துறை மேம்பாட்டுக்கான ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, அவரது மனைவி மற்றும் இரண்டு செயலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வட்டாரங்களின்படி, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வது நாடாளுமன்ற உறுப்பினராவார்.

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் அவரது மனைவி IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம்

இதேவேளை, சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் வேண்டுகோளின் பேரில், கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் திங்கள்கிழமை (16) நாடாளுமன்றத்தில் கூட்டப்படவுள்ளது.

இதற்கு சபாநாயகர் தலைமை தாங்குவார்.

சபைத் தலைவர், அமைச்சர் தினேஷ் குணவர்தன, தற்போதைய கொவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டத்தை கூட்ட முன்மொழிந்ததாகக் கூறினார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) முதல் வெள்ளிக்கிழமை வரை நாடாளுமன்றத்தை கூட்ட கட்சித் தலைவர்களின் முந்தைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி