1200 x 80 DMirror

 
 

இலங்கைக்கு ஒன்லைனில் விசாக்களை வழங்கும் இணையத்தளத்தில் மோசடி!இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டினருக்கு ஒன்லைனில் விசாக்களை பெற்றுக் கொள்வதற்கான குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை போன்று போலி இணையதளம் செயல்பட்டு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதா என்பதை அறிய அரச புலனாய்வு சேவை (SIS) யிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி ஐந்தாவது வருடமாகவும் தொடரும் போராட்டம்!படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க 13 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்த தமது உறவுகளைத் தேடும் போராட்டம் ஐந்து வருடமாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மின்சார பொறியியலாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை மூடிமறைக்கும் சிலரின் முயற்சிகளுக்கு அடிபணிய வேண்டாம் என இலங்கை மின்சார சபையின் தலைவரிடம் மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மின் பொறியாளர் மீதான குற்றச்சாட்டை மின் பொறியாளர்களே விசாரிக்க வேண்டும் என்று யாராவது முடிவு செய்தால், இனிமேல் பொறியியலாளர்களுக்கு எதிரான வழக்குகளை பொறியியலாளர்களே விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகளால் விசாரிக்கப்பட வேண்டியதில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின் பொறியியலாளர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விரைவான விசாரணைகளை இறுதித் தீர்ப்பு வரும் வரை தொடருமாறு இலங்கை மின்சார சபையின் தலைவரை குறித்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

e users ltr chrmn ceb 11.00 page 0001

 

e users ltr chrmn ceb 11.00 page 0002

e users ltr chrmn ceb 11.00 page 0003

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 16 பில்லியன் பாரிய நிதிமோசடி? - மறுக்கும் ஆழும் தரப்பு!மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கலகெதர முதல் பொத்துஹெர வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளில் எவ்வித ஊழல்களும் இடம்பெறவில்லை என்பதுடன், நிர்மாணப் பணிகளுக்கான டெண்டர் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 100 பக்தர்களுக்கு கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை குறித்த குறிப்புக்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து புதிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதாரம் மோசமடைந்து, வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், அரச, தனியார் ஊழியர்களுக்கு 5000 ரூபா வழங்க சிபாரிசு செய்துள்ள அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மாவை வழங்கி ஏமாற்றியுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் பழனி திகாம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக் கோரும் மக்கள் மனநல மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என ஒரே நாடு ஒரே சட்டம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி