குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து புதிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.



இதுகுறித்து தான் சிரேஸ்ட சட்டத்தரணிகள் சிலருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

ஷானி அபேசேகரவின் மனு :

குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பீ அறிக்கையின் பிரகாரம் தான் கைது செய்யப்படுவதையும் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதையும் தடுத்து உத்தரவிடுவதுடன் தனக்கு 10 கோடி ரூபாவை நட்டஈடாக செலுத்த உத்தரவிடுமாறும் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சார்பில் உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த அடிப்படை உரிமை மனு சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா, அத்திணைக்களத்தின் விஷேட விசாரணைப் பிரிவின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷனி ஹேவாபத்திரண விஷேட பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக டி சில்வா உள்ளிட்ட 14 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை வழிநடத்திய மொஹமட் ஹாசிம் மொஹமட் சஹ்ரான் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பீ அறிக்கைக்கு அமைய, தம்மை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் 9/1 சரத்திற்கு அமைய கைது செய்யப்படுவதற்கும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியால் தமக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கும் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு இந்த மனுவூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

அநாமதேய மனு ஒன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட போலியான விசாரணை அறிக்கைக்கு அமைய தனக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பீ அறிக்கையையும் வலுவிழக்கச் செய்யுமாறும் அடிப்படை உரிமை மனுவினூடாக மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அநாமேதய மனு தொடர்பில் விசாரிக்க உதவி பொலிஸ் அத்தியட்சர் மெரில் ரஞ்சன் லமா ஹேவா தலைமையில் மூன்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தான் அறிவதாகவும் அவர்கள் மூவருமே தன்னுடன் முன்விரோதம் உள்ளவர்கள் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உதவி பொலிஸ் அத்தியட்சர் மெரில் ரஞ்சன் லமாஹேவாவின் சகோதரரே வெலிக்கடை சிறைக் கைதிகள் படுகொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரரான ஷானி அபேசேகர, அவ்விசாரணையை தானே வழி நடாத்தியதாகவும் அதனூடாக அவருக்கு தன்னுடன் முன் விரோதம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷினி மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக டி சில்வா ஆகியோருக்கு எதிராக தான் திணைக்கள மட்ட ஒழுக்கார்று விசாரணைகளை முன்னெடுத்ததன் ஊடாக அவர்கள் முன் கோபத்தில் உள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார்.

ஏதேனுமொரு விதத்தில் தாம் கைது செய்யப்பட்டால், உடனடியாக விடுதலை செய்வதற்குரிய உத்தரவை பிறப்பிக்குமாறும், அவ்வாறு இடம்பெற்றால் 100 மில்லியன் நட்டஈட்டை செலுத்துவதற்கு உத்தரவிடுமாறும் ஷானி அபேசேகர தனது மனுவினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி