காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி ஐந்தாவது வருடமாகவும் தொடரும் போராட்டம்!படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க 13 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்த தமது உறவுகளைத் தேடும் போராட்டம் ஐந்து வருடமாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கடும் மழையையும் பொருட்படுத்தாது ஐந்தாவது வருடமாகவும் தமது உறவுகளுக்காக நீதி கோரி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  தமிழ் தாய்மார்கள் கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்பாக ஒன்றுகூடிய டிப்போ சந்தி வரை பேரணியாகச் சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மக்கள் பிரதிநிதிகள், வெகுஜன அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டதாக வன்னியில் உள்ள ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

"குடும்பங்களாக தஞ்சமடைந்து கைது செய்யப்பட்ட எங்கள் உறவினர்கள் எங்கே?"''இராணுவமே உடனடியாக வெளியேறு''"எங்கள் நிலங்களை எங்களுக்குக் கொடு"இராணுவ மயமாக்கலுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. “யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் யுத்தத்தில் எமது உறவினர்கள் இறந்ததாகத் தொடர்ந்தும் பொய் கூறி வருகின்றனர்.

இந்த நாட்டில் அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதாலேயே நாம் சர்வதேச தஞ்சம் கோருகின்றோம் என அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த கிளிநொச்சி டிப்போ சந்தியில் வைத்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைப்பதற்காகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினால் தயாரிக்கப்பட்ட மனுவொன்று வேலன் சுவாமியிடம் கையளிக்கப்பட்டது.“இறுதிப் போரில் இறந்தவர்கள் பற்றி நாங்கள் கேட்கவில்லை.

இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவினர்கள் தொடர்பில் நாம் கேட்கின்றோம். கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட எமது தளபதிகள் தொடர்பில் நாங்கள் கேட்கின்றோம்” என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவர் சிவானந்தன் ஜெனிதா தெரிவித்தார்.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி