அரச சேவையில் இணைந்துகொண்ட, பல்லாயிரக்கணக்கான புதிய பெண் பணியாளர்களின்  மகப்பேற்று விடுமுறையை  பாதியாகக் குறைப்பதற்கான, நிலையான விதிமுறைகளை மீறும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பணத்திற்காக  குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.47 வயதான சந்தேக நபர் 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் இருந்து 200 பணக்காரர்களுடன் இலங்கைக்கு வரவிருந்த AEROFLOT விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஐரோப்பா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபு காரணமாக விமானம் ரத்துச் செய்யப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாய சட்டங்களை ஓராண்டுக்கு செயல்படுத்திப் பார்ப்போம். அவை விவசாயிகளுக்குப் பலன் அளிக்காவிட்டால் அவற்றைத் திருத்துவோம் என்று கூறியுள்ளார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.இந்த 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தங்கள் போராட்டத்தைத் தொடங்கி இன்று வெள்ளிக்கிழமை ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், பாஜக இந்த சட்டங்களுக்கு ஆதரவாக பல விதங்களில் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.

மஹிந்தமீது கருத்துதடைகளை வைக்குமாறு தேசிய அமைப்புகள் பசிலிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை பத்திரிகைக் குழுவின் மூத்த விரிவுரையாளரும்,  அதனது தலைவருமான மஹிந்த பதிரன அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தேசிய அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகயவின் அரசியலமைப்பு கட்சியின் இடைக்கால செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது கடந்த சனிக்கிழமை பண்டாரவல ஹோட்டலில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் நடைபெற்றுள்ளது.அரசியலமைப்பின் படி, கட்சித் தலைவர் பதவி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள்,துணைத் தலைவர் அல்லது துணைத் தலைவர்கள் ஆகிய நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. அரசியலமைப்பின் படி, கட்சித் தலைவர் ஒவ்வொரு ஆண்டும் செயற்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

கொரோனா ஒழிப்பிற்கான தடுப்பூசி தொடர்பில் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ள நிலையில், கேகாலையை சேர்ந்த தம்மிக்க பண்டார தயாரித்த பாணி மருந்து இலங்கையில் அநேகமானவர்களது கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த மருந்து தொடர்பில் ஆராய்ந்த ஆயுர்வேத திணைக்களம் தம்மிக்க பண்டாரவிற்கு ஆயுர்வேத மருந்து உற்பத்தி நிலையமொன்றை பதிவு செய்வதற்கான எழுத்துமூல அனுமதியை வழங்கியுள்ளது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள சர்வதேச ஆடை நிறுவனத்தின் ஊழியர்கள் குண்டர்களின் எதிர்ப்பையும் மீறி, ஆண்டிறுதி போனஸில் பாதியை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.தொழிற் திணைக்கள அதிகாரிகள், ஆடை நிறுவன நிர்வாகம் மற்றும் ஊழியர்களுடன் 22ஆம் திகதி,  செவ்வாய்க்கிழமை கலந்துரையாடலுக்குப் பின்னால், நெக்ஸ்ட் நிர்வாகம் ஊழியர்களுக்கு 50 சதவீத போனஸை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக, பெரும்பாண்மையான பெண்கள் பணிபுரியும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் தொழிலாளர் பிரச்சினைகளை கையாளும் தாபிந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமிலா துஷாரி தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக இறந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர் நேற்று (23) உச்சநீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் போன்ற கீழ் மட்ட இனவெறித் தலைவர்களைக் கொண்ட ஒரு அரசாங்கத்தை நான் பார்த்ததில்லை முந்தைய அரசாங்கத்தின் தேசிய சகவாழ்வு, உரையாடல் மற்றும் உத்தியோகபூர்வ மொழிகளின் அமைச்சர் இதைப் பற்றி வெட்கப்படுகிறார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி