தமது கவலையை வெளிப்படுத்திய ஆசிரியருக்கு எதிராக கல்வி அதிகாரிகள் எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது.சமூக ஊடகங்களில் தமது கவலையை வெளிப்படுத்திய ஆசிரியரிடம் காரணம் கோரி கடிதம் அனுப்புவது சட்டபூர்வமான விடயமல்லவென, இலங்கை ஆசிரியர் சங்கம், ஸ்ரீ ஜயவர்தனபுர  வலயக் கல்வி அலுவலக பணிப்பாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

மஹர சிறைச்சாலை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளின் உரிமைகளை பறிக்க சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகள் நீதிமன்றத்தில் தோல்வியடைந்துள்ளன.பதினொரு பேரைக் கொலை செய்த மற்றும் 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறைத் தாக்குதலில் பலியானவர்களை பிரதிநிதித்துவப்படுத்த சட்டத்தரணிகளுக்கு முடியும் என வெலிசர நீதவான் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டார்.

மாகாண சபைத் தேர்தலில் எதிர்பார்க்கும் அளவு வேட்பாளர்களை தமது கட்சிக்கு ஒதுக்குவதற்கு ஆளுங்கட்சி தவறினால், தனித்துப் பயணிப்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகர சிறைச்சாலையில் நடந்த 11 பேரின் படுகொலை மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள், , சிறைக்குள் சித்திரவதை செய்யப்படுவதாக நாட்டின் முன்னணி உரிமைகள் குழு குற்றம் சாட்டுகிறது."இந்த சாட்சிகள் இன்று இந்த கொலைகாரர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நாங்கள் தொடர்ந்து கூறுகிறோம். இந்த ஆதாரங்களை எப்படியாவது புதைக்க அவர்கள் கடமையாக முயற்சி செய்கிறார்கள்."

ஒவ்வொரு அமைச்சிலும் மேம்பாட்டு செயலாளர் என்ற புதிய பதவி நிறுவப்பட்டுள்ளது உள்ளூர் அரச வட்டாரங்களின்படி, ஓய்வுபெற்ற மூத்த இராணுவ அதிகாரிகளை நியமிக்க ஜனாதிபதி பரிசீலித்து வருவதாக அறியக்கிடைக்கின்றது.

கிழக்கு சிரியாவில் பேருந்து ஒன்று தாக்கப்பட்டதில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிப்பாய்கள் என்று கூறப்படுகிறது.அதே நேரம், சிரியாவின் அரசு ஊடகம் இறந்தவர்கல் அனைவரும் குடிமக்கள் என்று கூறுகிறது.பதற்றம் மிகுந்த டெய்ர் அல்-ஜோர் மாகாணத்தில் புதன்கிழமை நடந்த இந்த தாக்குதல் நடந்துள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பு அவரது ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது. ரஜினியை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்த்த ஒரு சில ரசிகர்கள் கோபமும் அடைந்துள்ளார்கள்.தமிழகத்தில் இதுவரை பல நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கியிருந்தாலும், அரசியல் கட்சியை தொடங்காமல் தனது பயணத்தை ரஜினி நிறுத்திக்கொண்டார் என்பது ரசிகர்களை ஆதங்கப்பட வைத்துள்ளது.

“உங்களுடைய தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ் மாநகர சபை முதல்வர் பதவியை நாம் இழந்திருக்கின்றோம். தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் மிக முக்கிய அடையாளமான யாழ் மாநகர சபை தலைமையை எமது கட்சி இழந்தமைக்கு மேற்சொல்லப்பட்ட தங்களது நடவடிக்கைகளே காரணமாகும் என்பதையும், இதனால் ஏற்படும் கட்சியின் பின்னடைவுக்கும் தாங்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதையும் இத்தால் பதிவு செய்கின்றேன்” எனத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

அண்மையில் உக்ரேனிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மூன்று சுற்றுலாப் பயணிகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரேனிலிருந்து மூன்று சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட மூன்று சுற்றுலாப் பயணிகள் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

28 ஆம் தேதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அரசாங்கக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அங்கு சமூகமளித்திருந்த கட்சித் தலைவர்களான தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டத்தில் மாகாண சபை தேர்தலை நடத்தக்கூடாது என்று கடுமையாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி