நாடு முழுவதுமுள்ள திரையரங்குகள் வரையறுக்கப்பட்ட ஆசனங்களுடன் ஜனவரி முதலாம் திகதி முதல் திறக்கப்படும் என திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பொதுஜனபெரமுன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சமர்ப்பிக்கும் வேட்பாளர்களிற்கு போட்டியிடுவதற்கு இடமளிக்காத பட்சத்தில் மாகாணசபை தேர்தல்களில் கட்சி தனித்து போட்டியிடவேண்டியிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்வதைப் போல உணர்கிறேன் என்று இராஜங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.2015 ஆம் ஆண்டில் ஒரு முக்கியமான கட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டதா என்று சந்தேகிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொத்தமல்லி என்று கூறி உக்ரைனில் இருந்து 28 விவசாயக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இதன் பின்னால் ஒரு பிரபலமான ஒருவரின் மகன் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக lankatruth.com தெரிவித்துள்ளது.

பசில் ராஜபக்ஷவின் அழுத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல பௌத்த துறவிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக அரச உள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் பார் அசோசியேஷன் தேர்தலுக்காக டிசம்பர் 18 அன்று ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தைத் தொடர்ந்து, இலங்கை ராணுவ நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் அவர்களது அலுவலகத்தில் உள்ள மற்ற அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குளியலறையில்  வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு காயப்பட்ட தனது தாயை வேறு வழியின்றி அரச வைத்தியசாலைக்கு எடுத்துச்  சென்றபோது அவருக்கு கொரோனா என்று சொல்லி எரித்தார்கள் முஸ்லிம் தாய்க்கு நடந்த கொடூரம், இன்று பலாத்காரமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1000 ரூபாய் வழங்க பிராந்திய பயிர்ச்செய்கை நிறுவனங்கள் (RPCs) இணங்கியுள்ளதாக ‘அருன’ என்ற சிங்களப் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

சட்டத்தரணிகளான ஷிரால் லக்திலக மற்றும் கீர்த்தி தென்னகோன் மற்றும் அசாத் சாலி உட்பட இரண்டு முன்னாள் ஆளுநர்னர்களும் சஜித்தின் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது, சஜித் பிரேமதாச தலைமையிலான 'சமகி ஜன பலவேகய' அதிகாரிகள் அவர்களை எந்த பதவியிலும் நியமிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.

கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் மற்றும் லக் சதொச ஆகிய நிறுவனங்கள் அடுத்த திங்கட்கிழமை முதல் இரண்டு புதிய தலைவர்களைக் கொணடு இயங்கவிருப்பதாக வர்த்தக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, சிறைச்சாலை தலைமையகத்தின் பிரதி ஜெனரலாக பணியாற்றிய வழக்கறிஞர் வெணுர குணவர்தன, இ.தொ.காவின் தலைவராகவும், சிவில் பாதுகாப்புத் துறையின் முன்னாள் பணிப்பாளருமான ரியர் அட்மிரல் ஆனந்தா பீரிஸ் ஆகியோர் புதிய தலைவர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி