உலகில் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய பெரும்பாலான உயிரினங்கள் இலங்கையில் அழிவின் விளிம்பில்!
கடந்த பத்து வருடங்களில் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய பெரும்பாலான உயிரினங்கள் இலங்கையில் அழிவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கடந்த பத்து வருடங்களில் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய பெரும்பாலான உயிரினங்கள் இலங்கையில் அழிவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறும் இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பதற்கான தேசிய நிறுவனத்தின் பணிகள் குறித்து நாடாளுமன்றக் கோப் குழு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் மர நடுகை நிகழ்வில் ஈடுபட்டமைக்கு, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன.
பிரித்தானியாவில் சில முன் நாள் போராளிகளை சந்தித்துள்ள இந்திய புலனாய்வுத்துறை(RAW), மீண்டும் இலங்கையில் ஒரு போராட்டம் வெடிக்க வேண்டும் என்றும். இம் முறை நாங்கள் முழு ஒத்துழைப்பையும் தருகிறோம் என்று கூறியுள்ளார்கள். பல முன் நாள் போராளிகள் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்கள். மேலும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சென்ற சில போராளிகள், பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்கள் என அறியக்கிடைக்கின்றது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கல்முனை நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் பேர் வாங்கிய கூத்துக்கலைஞர் தங்கராசுவை இப்போதும் எவரும் மறந்து விடவில்லை. முதல் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தபோதிலும் "வறுமை" அவரை விட்டு நீங்கவில்லை.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததாகக் கூறப்படும் சாய்ந்தமருது எம்.எம்.ஆதம்பாவா அவர்களின் ஜனாஸாவை எதிர்வரும் மார்ச்-18 ஆம் திகதி வரை தகனம் செய்யாமல் வைத்திருக்குமாறு கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு உரித்தான காணியில் சீனாவிற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் அமைந்துள்ள இலங்கை கடற்படை முகாமை வேறு இடத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த 7 ஆம் திகதி ஆங்கில நாளேடு ஒன்றில் செய்தி வெளியானது.
பாடசாலைக்குச் சென்ற முதல் நாளே விபத்தில் சிக்கி 6 வயதுடைய சிறுவன் பலியாகியுள்ள சம்பவம், பதுளையில் இன்று(15) பதிவாகியுள்ளது.
நாம் காலாகாலமாக வாழ்ந்துவந்த காணியை மீட்டுத்தாருங்கள் என பொத்துவில் 60ஆம் கட்டை கனகர்கிராம தமிழ்மக்கள் மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நேற்று (14)ஞாயிற்றுக்கிழமை அவர்கள் 906வது நாளாக போராட்டக்கூடத்தில் குழுமியிருந்தவேளையில் அங்கு வழக்கமாகச்சென்று உதவிவரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரும் சமுக உணர்வாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலிடம் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
விமல் வீரவன்ச மற்றும் அரசாங்கத்தில் உள்ள இனவாதிகள் எதிராக இருந்தபோது அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை நிறைவேற்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் ஆதரவை பசில் ராஜபக்ஷவால் எவ்வாறு பெற முடிந்தது, என்ற தகவல் நேற்று வெளிவந்துள்ளது.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை பயணிகள் படகு, திருத்த வேலைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தும், காங்கேசன்துறை துறைமுகத்திலேயே இன்னும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி தெரிவித்தார்.
முகமது அலி சத்பரா மலையேறுபவர்களின் சர்வதேச சமூகத்தில் ஒரு திறமையான வீரராகவும், தனது சொந்த நாடான பாகிஸ்தானில் ஒரு ஹீரோவாகவும் நினைவுகூறப்படுகிறார்.
நெற் செய்கையின் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை உலரவிடுவதற்காக பிரதான வீதிகள் உள்ளக வீதிகளை விவசாயிகள் பயன்படுத்துவதனால் போக்குவரத்து சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் கலந்துரையாடி முஸ்லிம்களின் அடக்கம் செய்யும் உரிமையை வழங்க முடிவு செய்துள்ளனர்.