அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளும் செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அந்த நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்த அமைச்சர்களிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை நடத்தும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வூடகச் சந்திப்பின் போது, நாட்டில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்ட போது, அவ்வாறு கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களுக்கு அமைச்சர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

அதாவது, எதிர்காலத்தில் ஊடகச் சான்றுகளைக் கொண்ட பத்திரிகையாளர்கள் மட்டுமே கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

அதன் பிரகாரம் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இந்த வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் மாத்திரமே இனி வரும் காலங்களில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியும்.

வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்குறித்த தீர்மானங்களை அறிவித்துள்ளார்.

அத்துடன் அமைச்சரவைத் தீர்மானங்கள் மற்றும் அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பான கேள்விகள், அரசாங்கம் தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட முக்கிய கேள்விகளுக்கு மாத்திரமே இனி வரும் காலங்களில் தான் பதிலளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பை மேற்கொள்வதற்காகவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி