விமல் வீரவன்ச மற்றும் அரசாங்கத்தில் உள்ள இனவாதிகள் எதிராக இருந்தபோது அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை நிறைவேற்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் ஆதரவை பசில் ராஜபக்ஷவால் எவ்வாறு பெற முடிந்தது, என்ற தகவல் நேற்று வெளிவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்படும் என்று பசில் ராஜபக்ச உறுதியளித்தமையினால், 20 வது திருத்தத்தை ஆதரித்ததாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
20 வது திருத்தத்தை முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம்,எச்.எம். எம்.ஹரிஸ்,எம்.எஸ்.தௌபீக்,ஹாபிஸ் நசீர் ஆகியோர் ஆதரித்தனர்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் கூறுகையில்,
நாங்கள் 20 ம் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியது கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காகும் .ஆனால் இதுவரைக்கும் அவர்கள் அந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கவில்லை.
இருப்பினும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மன்னிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம் நேற்று கூடி 20 தை ஆதரித்த உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி எடுக்க வேண்டிய ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.