தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவும், கிழக்கு மாகாணசபை வேட்பாளராக இரா.சாணக்கியனும் களமிறக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆலோசனை  தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை சிறீலங்கா சுதந்திரக் கட்சி (எஸ்.எல்.எஃப்.பி) கடுமையாக மறுத்துள்ளது, கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாடு முழுவதும் அமைதி வழியில் பிரச்சாரத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்களின் சபை தீர்மானித்துள்ளது.

பிரித்தானியாவில் சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள அம்பிகை உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு- வாகரை பிரதேசத்தின் கதிரவெளி கட்டுமுறிவுக்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் அதிகாலை காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

மிகவும் குறுகிய காலத்தில் மக்களின் வெறுப்புக்கு உள்ளான ஒரே ஒரு அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளதென சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவான பௌத்த பிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க கோரி, அனுமதி மறுக்கப்பட்டு பலாத்காரமாக எரிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கல்முனை மக்கள் வங்கிக்கிளையில் பணியாற்றும் முகாமையாளர் உள்ளிட்ட ஜந்து ஊழியர்களுக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசியப்பரப்பில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்பட வேண்டுமெனவும் அவ்வாறு  செயற்படுவதற்கு தேவையான ஒரு கட்டமைப்பை உருவாக்குவோம் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி,  வடக்கில் பாரிய மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைவரையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இலங்கையின் சிவில் சமூக அமைப்புகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் வைத்து சட்டத்துறை மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் கரந்தையில் வசிக்கும் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை உடைத்தெறிந்து காணிகளிலிருந்து அவர்களை விரட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் முக்கிய சந்தேகநபர் தொடர்பில், நன்கு அறிந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படாமை குறித்து, இந்த தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி