1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் கலந்துரையாடி முஸ்லிம்களின் அடக்கம் செய்யும் உரிமையை வழங்க முடிவு செய்துள்ளனர்.

பெப்ரவரி 09 அன்று நடைபெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக வார இறுதி 'அனிதா' செய்தித்தாள் அதன் தலைப்புச் செய்தியில் இதனை தெரிவித்திருந்தது.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு காரணமாக, இலங்கையை மனித உரிமை குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கும் திட்டமாக அடக்கம் செய்ய அனுமதி வழங்குவது உட்பட பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் அடக்கம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவிற்கு இந்த முடிவு அறிவிக்கப்பட வேண்டும், மேலும் அந்தக் குழுவின் முடிவாக இது அறிவிக்கப்பட வேண்டும்.

கொவிட் -19 தொற்று நிலத்தடி நீரினால் பரவாது என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டபோது, ​​பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சமகி ஜன பலவேகய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். எஸ்.எம்.மரிக்கார் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்பியகேள்விக்கு அடக்கம் செய்ய முடியும் என்று கூறியிருந்தார் .

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ட்விட்டரில் இதனை பாராட்டியிருந்தார்

ImranTw

தகனம் தொடர்கிறது:

கொவிட் தொற்றால் மரணிப்பர்களை தகனம் செய்யும் நடவடிக்கை இன்னும் செல்லுபடியாகும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, 'அனிதா' பத்திரிகை  எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இது ஏப்ரல் 11, 2020 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு 20170/8 இன் படி கொவிட்தொற்றால் மரணிக்கும் உடல்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாது என்று கூறினார்.

 சுகாதார அமைச்சரின் தலையீட்டோடு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு திருத்தம் செய்யப்படும் அல்லது ரத்து செய்யப்படும் வரை கொவிட் தொற்றால் மரணிப்பவர்களின் தகனம் தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிப்ரவரி 10 ம் திகதி நாடாளுமன்றத்தில் பிரதம மந்திரி கொவிட் தொற்றால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக அறிவித்திருப்பது செல்லுபடியாகாது என்று உபுல் ரோஹன தெரிவித்தார்.

இருப்பினும், பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் கொவிட் தொற்றால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் பல அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக எதிர்ப்பு?

imran khan 2021.02.12 1

கொவிட் தொற்றுநோயால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டதிலிருந்து பெப்ரவரி 23 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடாவிட்டால், ஜனாதிபதி செயலகத்தின் முன் பாரிய போராட்டத்தை நடத்த இலங்கை முஸ்லிம் அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்யும் நாளில் இப்போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் பெப்ரவரி 23 அன்று இலங்கைக்கு ஒரு குறுகிய இருதரப்பு சந்திப்புக்கு வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ​

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி