சீனாவின் வடக்கு நகரமான லியோனிங்கில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்
22 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக சீன ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
குறித்த தீ விபத்து அந்நாட்டு நேரப்படி இன்று (29) பிற்பகல் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்குமாறு சீன ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவில், ஊழியர்கள் பாதுகாப்பு அம்சங்களை புறக்கணிப்பதால், தொழில்துறை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன எனவும் உரிய முறையில் பராமரிக்கப்படாத உட்கட்டமைப்பு, சட்டவிரோதமாக சேமிக்கப்படும் இரசாயனங்கள் மற்றும் தீ வெளியேறும் வழிகள் மற்றும் தீ தடுப்பு இன்மை போன்ற காரணங்களே இவ்வாறான விபத்துக்களுக்கு காரணம் எனவும் கூறப்படுகின்றது.