வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பல வருடங்களாக போராடி வரும் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்புகளை வழிநடத்தும் தாய்மார்களைத் தலைநகருக்கு அழைத்து துன்புறுத்துவதாக, இலங்கை பாதுகாப்புப் படையினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நான் நீதி அமைச்சராக இருக்கும் வரை, எந்த வகையிலும் 2500 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இலங்கையில் பௌத்த சட்டத்தை ரத்து செய்வதோ அல்லது திருத்துவதோ எந்த நம்பிக்கையும் இல்லை என்றும், அவ்வாறு செய்ய வேண்டும் என்று நான் கனவுகூட கண்டதில்லை என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் கட்டாய தகன விடயத்தில் தலையீடு செய்யவும்,  ஜெனீவாவில் அரசாங்கத்தை ஆதரித்து, தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்பட வேண்டாம் எனவும்  இலங்கை முஸ்லிம் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு எவ்வித பதிலும் அளிக்காமல் பாகிஸ்தான் பிரதமர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

கூகுல் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தளத்தில் செய்திகளைப் பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்கிற சட்டத்தை அவுஸ்திரேலியா நிறைவேற்றியது.

இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (24) பிற்பகல் சந்தித்துப் பேசியுள்ளார்கள்.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றதைப் போன்று, ஒரு படுகொலையை பூசா சிறைச்சாலையிலும் மேற்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதா என, கைதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாட்டின் முன்னணி குழு கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை பத்ரமுல்ல சீலரத்ன தேரர் கையளித்துள்ளார்.

காணாமல்போன தனது மகனைத் தேடியலைந்து போராடி நீதி கோரி வந்த தாயொருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.வவுனியா மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது-61) என்ற தாயாரே நேற்று செவ்வாய்க்கிழமை மரணமானார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இறுதி அறிக்கை நேற்று வெளியிடப்பட்டதன் பிற்பாடு விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

உயிர்த்த ஞாயிறு  தாக்குதலுடன் தொடர்புபட்டதாக கூறப்பட்ட நபரொருவரை பற்றி அறிந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இராணுவ தளபதிக்கு தொலைபேசி மூலம் அழைப்பொன்றை எடுத்து உதவி பெற முயற்சித்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இலங்கையில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறித்து பேசுவதற்கான வாய்ப்பை தடுத்ததாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது குற்றச் சாட்டை முன்வைத்துள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய பரிந்துரைத்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி