உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாடு முழுவதும் அமைதி வழியில் பிரச்சாரத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்களின் சபை தீர்மானித்துள்ளது.

அதன் முதல் படியாக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 07)  நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் அமைதியான போராட்டம் இடம்பெறும் என அறிவித்துள்ளது.

இந்த முடிவின்படி, மார்ச் 07 'கருப்பு ஞாயிறு' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு அன்று, கறுப்பு உடையணிந்து அனைத்து கிறிஸ்தவர்களும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை வெளிப்படுத்தக் கோரி அமைதியான போராட்டத்திற்கு தேவாலயங்களில் கூட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து பிரார்த்தனைகளும் இடம்பெறும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி