ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்தும் கறுப்பு ஞாயிறாக பிரகடனம்!
ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதி கிடைக்கும் வரை எதிர்வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளையும் கறுப்பு ஞாயிறாக பிரகடனப்படுத்துவதற்கு கத்தோலிக்க ஆயர் பேரவை தீர்மானித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதி கிடைக்கும் வரை எதிர்வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளையும் கறுப்பு ஞாயிறாக பிரகடனப்படுத்துவதற்கு கத்தோலிக்க ஆயர் பேரவை தீர்மானித்துள்ளது.
இலங்கையில் இந்தியாவின் கடும்போக்கு பாரதீய ஜனதா கட்சி உருவாவது பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லையென்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன.
இலங்கை மற்றும் நேபாளில் தாம் விரும்பும் வகையிலான ஆட்சியமைக்கும் திட்டம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் அமித் ஷா அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இதனையடுத்து குறித்த பெயரில் இலங்கையில் ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், மக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லையெனவும் இலங்கையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் அதிகாரமுள்ள தேர்தல் ஆணைக்குழு இது குறித்து முடிவெடுக்கும் எனவும் ரமேஷ் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உப்பு பாவனையின் உண்மையான பாதிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, உலகம் பூராகவும் உப்பு பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் சர்வதேச வாரம் நேற்று முதல் மார்ச் 14-ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறை கொண்ட ஆபத்தான வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த மிருகத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 268 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசின் முக்கிய துறைகளின் கம்பியூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரயில்வே வாரியத்தின் 4 முக்கிய தலைமை அதிகாரிகள் அடங்கிய குழு சார்பில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்கு வங்காளத்தின் கல்கத்தா நகரில் ஸ்டிராண்ட் சாலையில் உள்ள 13 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்றில் திடீரென நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றிய தகவலறிந்து, 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றன.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன்படி ‘பொதுபலசேனா’ அமைப்பை நாம் தடை செய்ய மாட்டோம் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து முல்லைத்தீவில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதுடன், பெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு அது தீவிரமடைந்துள்ளது. இதேவேளை பெண் பிரதி பொலிஸ் மா அதிபரின் நியமனத்தை அங்கிகரிக்க முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக இடம்பெறும் இத்தகைய செயற்பாடுகளை மாற்றி அமைக்கும் முகமாக, எமது கட்சியில் காணப்படும் முக்கிய பொறுப்புகளில் பெண்களுக்கும் இடமளிக்க வேண்டும். இதற்கு கட்சி தலைவர் ஒத்துழைப்பு வழங்குவார் என்று எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
கேரள கடற்பகுதியில் இலங்கையைச் சோ்ந்த 3 படகுகளை சிறைபிடித்த இந்திய கடலோர காவல்படை, அந்தப் படகுகளில் இருந்த 260 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பால்மா விலையை அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் அனுமதியை கோரியுள்ளனர்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் 4 வது நாளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக இளைஞரொருவர், சிசிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.