ஜி.எஸ்.பி பிளஸ் குறித்து விசாரிக்க வந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சு
அதிகாரிகளுக்கும் இடையே இன்று கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் பயணத்தின் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் GSP சலுகைகள் உட்பட பல விடயங்களை மதிப்பாய்வு செய்வார்கள் என்றும் இந்தக் குழு அடுத்த மாதம் ஏழாம் திகதி வரை நாட்டில் தங்கவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.