பால்மா விலையை அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் அனுமதியை கோரியுள்ளனர்.

அதனடிப்படையில் ஒருகிலோ கிராம் பால்மாவின் விலையை 100 ரூபாவினாலும் 400 கிராம் அடங்கிய பால்மா பெக்கற்றின் விலையை 40 ரூபாவினாலும் அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கோரியுள்ளன.

உலக சந்தையில் பால்மாவின் விலை நூற்றுக்கு 30க்கும் 40க்கும் இடைப்பட்ட சதவீதத்தில் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ள பால்மா நிறுவனங்கள், இலங்கை ரூபாவின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது ஐக்கிய அமெரிக்காவின் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது ஆகையால், பால்மாவின் விலைகளை அதிகரிக்குமாறு அந்நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன.

 ஒரு மெற்றிக்டொன் பால்மா, 3200 அமெரிக்க டொலர்களுக்கு இன்றைக்கு 4 அல்லது 5 மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டது. தற்போது அதன் விலை 3900 ரூபாயாகும் ஆகையால், தற்போதிருக்கும் விலைக்கேற்ப பால்மாவை விற்பனைச் செய்யமுடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

ஒரு கிலோகிராம் பால் மாவின் தற்போதைய விலை 945 ரூபாயாகும் என்பதுடன் 400 கிராம் பக்கற்​ ஒன்றின் விலை 385 ரூபாயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி