யாழ்ப்பாணம் - செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறை கொண்ட ஆபத்தான வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நல்லூர் - செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானத்தில் நேற்று அதிகாலை தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதனை அடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப் படையினரால் குறித்த வெடி மருந்துகள் மீட்கப்பட்டன.

 3 கிலோ 750 கிராம் சி-4 மற்றும் ரி.என்.ரி. வெடி மருந்துகள் டெட்டனேற்றர்கள் அதற்கான வயர்கள் என்பன மீட்கப்பட்டன

 குறித்த வெடி மருந்துகள் அனைத்தும் தற்போது நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி