ரயில்வே வாரியத்தின் 4 முக்கிய தலைமை அதிகாரிகள் அடங்கிய குழு சார்பில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்கு வங்காளத்தின் கல்கத்தா நகரில் ஸ்டிராண்ட் சாலையில் உள்ள 13 மாடிகள் கொண்ட  கட்டிடம் ஒன்றில் திடீரென நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.  இதுபற்றிய தகவலறிந்து, 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றன. 

அவர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமுடன் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் 4 தீயணைப்பு வீரர்களும், துணை காவல் ஆய்வாளர் ஒருவரும், ரயில்வே ஊழியர்கள் இருவரும் அடங்குவர்.இந்த விபத்து மேற்குவங்கத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

விபத்து குறித்து  மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "கல்கத்தா ரயில் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ரயில்வே ஊழியர்கள், பொது மேலாளர் சம்பவ இடத்தில் உள்ளனர்.

மாநில அரசுடன் மீட்பு, நிவாரணப் பணியில் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். ரயில்வே வாரியத்தின் 4 முக்கிய தலைமை அதிகாரிகள் அடங்கிய குழு சார்பில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது"  எனத்தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி