இலங்கையில் புர்கா மீதான தடைக்கு பாகிஸ்தான் கவலை!
இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் மீது தடை விதிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் தனது கவலையை தெரிவித்துள்ளது
இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் மீது தடை விதிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் தனது கவலையை தெரிவித்துள்ளது
ஐக்கிய மக்கள் சக்தி, இன்றைய தினம் தமது முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது.கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
“ஆயுதக்குழு என்பது நமது தேவைக்காக நிகழ்ந்த சம்பவத்தினூடாக நம்மீது கட்டாயமாக திணிக்கப்பட்ட விடயமாகும். தற்போது அந்தத் தேவை மாறி, அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது” என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.
13 ஆம் திருத்த சட்டத்தை அமுலாக்குவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் எல்லாப் பிரிவுகளையும் முழுமையாக இயங்க வைக்கும் முகமாக சுகாதார, தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் குழு, நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
கல்முனை கிரீன் பீல்ட் மக்களின் மிக நீண்ட நாள் பிரச்சினையாக இருந்து வந்த தனித் தண்ணீர் மாணி வழங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் வீட்டுத்திட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித் தண்ணீர் மாணி வழங்கும் நிகழ்வு இன்று(15) திங்கட்கிழமை காலை 9.30க்கு கிரீன்பீல்ட் வளாகத்தில் நடைபெற்றது.
பாரிய மண் அகழ்வு மோசடியில் ஈடுபடுபவர்கள் அரச அதிகாரிகளின் உதவியுடன் காட்டை அழித்து கொள்ளை அடிப்பதாக கூறப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு (வெலிஓயா) பிரதேசத்திற்கு இன்று (மார்ச் 14) மாலை விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள், அப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கையில் அரச சேவையில் புதிதாக இணைந்துகொண்ட, பல்லாயிரக்கணக்கான பெண் பணியாளர்களின் மகப்பேறு விடுமுறையை பாதியாகக் குறைப்பதற்கான, இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மீண்டும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பில் 12வது நாளாக இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வன்முறை,இன,மத ரீதியாக குழப்பங்களை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எவரையும் விசாரணையின்றி புணர்வாழ்வு மையத்திற்கு அனுப்ப அங்கீகரிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
உலகளாவிய அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் 900 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உணவு தூக்கி எறியப்படுகிறது.கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோருக்குக் கிடைக்கும் உணவுகளில் 17% நேரடியாக குப்பை தொட்டிக்குச் செல்கிறது என்பதை ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் வீணாகும் உணவுகள் பற்றிய குறியீடு வெளிப்படுத்தியது.
கடந்த மழை வெள்ளத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது சிறிய குளங்களில் தற்போது நீர் நிரம்பியுள்ள நிலையில், தற்போது அக்குள்ள குளங்களில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்