‘அரபு நாடுகளின் நண்பனாகக் கூறும் இந்த அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது’ – ரிஷாட் பதியுதீன்!
புர்காவைத் தடைசெய்யும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென்றும், இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள், சர்வதேசத்திலிருந்து எமது தாய்நாட்டை தனிமைப்படுத்தும் சூழலையே ஏற்படுத்துவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் நீதியை உறுதிசெய்வது அவசியம்! சஜித் பிரேமதாஸ
ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் நீதியை உறுதிசெய்வது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
வரி வருமானத்தில் 15 பில்லியனுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய சீனி மோசடி குறித்து விசேட விசாரணை!
சீனி மோசடி தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புர்கா தடை ஏப்ரல் மாதத்திற்குள் செயற்படுத்தப்படும்! அரசாங்கம்
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து யோசனைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதிக்குள் செயற்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
விமுக்தி அரசியலுக்கு வருவது குறித்து சந்திரிக்கா தெரிவித்துள்ள கருத்து! அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ
இந்த நாட்டின் இளைஞர்கள் தற்போதுள்ள அரசியல் அமைப்பை மாற்ற முடிவு செய்துள்ளார்கள்.எனது மகன் விமுக்தியும் அந்த போராட்டத்தில் இருப்பார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்
‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வழிநடத்தியது ரிஷாட் பதியுதீனும் ஹிஸ்புல்லாஹ்வுமே’ - விஜயதாஸ ராஜபக்ஷ!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வழிநடத்தியது ரிஷாட் பதியுதீனும் ஹிஸ்புல்லாஹ்வுமே என்றும் பயங்கரவாதிகளை பாதுகாத்தவர் முஜிபுர் ரஹ்மான் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சுமந்திரன் மங்களவுடன்! (வீடியோ)
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மங்கள சமரவீர பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை ஆதரிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 16வது நாளாக இன்றும் தொடர்கின்றது.
8ஆவது நாளாக தொடரும் வடக்கு சுகாதார தொண்டர்கள் போராட்டம்!
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் தொடர்ந்து 8ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், இன்றையதினம் யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதி மற்றும் ஆளுநர் செயலக நுழைவாயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தாந்தாமலையில் இராணுவத்தினருக்காக 1500 ஏக்கர் காடுகளை சுவீகரிக்க நடவடிக்கை – தடுத்து நிறுத்திய சாணக்கியன், ஜனா!
தாந்தாமலையில் இராணுவத்தினருக்காக 1500 ஏக்கர் காடுகளை சுவீகரிக்கும் நடவடிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் ஆகியோர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் காணி வழக்கிலிருந்து விடுதலை!
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மனைவி ஆகியோர், காணி தொடர்பிலான வழக்கிலிருந்து கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.