பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மேதகு திரைப்படத்தை தரவிறக்கம் செய்த இருவர் கைது!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படத்தை இணையதளத்தில் தரவிறக்கம் செய்து விற்பனை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் நுவரெலியா பிரதேச புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.