ராஷ்மிகா மந்தனா தற்போது மும்பையில் வசித்து வருகிறார், மிஷன் மஜ்னு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார்.

தெலுங்கின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இவரது நடிப்பில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ வெளியாகவிருக்கிறது.

தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம்  கவனம் ஈர்த்தார் ராஷ்மிகா. அதுவே, அவரை ‘நேஷனல் க்ரஷ்’ ஆக்கியது. கூகிளில் நேஷனல் க்ரஷ் என்று தேடினால் ராஷ்மிகா மந்தனா பெயர்தான் வரும். பாக்கியராஜ் கண்ணனின் இயக்கத்தில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து உள்ளார்.

ராஷ்மிகா மந்தனா தற்போது மும்பையில் வசித்து வருகிறார், மிஷன் மஜ்னு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார்

இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகைகளில் அதிக பாலோயர்ஸ் எண்ணிக்கைக் கொண்ட நடிகைகளில் காஜல் அகர்வால் முன்னிலையில் இருந்தார். அவரைத்தொடர்ந்து, நடிகை சுருதிஹாசன், ரகுல் பிரித் சிங், சமந்தா உள்ளிட்டோர் இருந்தனர். இந்த நிலையில், அனைவரையும் பின்னுக்குத் தள்ளி 1.92 கோடிக்கும் மேற்பட்ட  பாலோயர்ஸ்களைப் பெற்றுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

முதல் இடத்தில் இருந்த காஜல் அகர்வால் 1.90 கோடிக்கு மேற்பட்ட பாலோயர்ஸ்களும், சமந்தா 1.75 கோடிக்கு மேற்பட்ட பாலோயர்ஸ்களும், ரகுல் பிரீத் சிங் 1.72 கோடிக்கு மேற்பட்ட  பாலோயர்ஸ்களையும், சுருதிஹாசன் 1.70 கோடிக்கும் மேற்பட்ட  பாலோயர்ஸ்களையும் பெற்றுள்ளனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி