மராட்டிய ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 36 பேர் பலி!
மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நேற்று மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.மராட்டிய மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டுகிறது. இதனால், மும்பை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக ராய்காட் மாவட்டத்தில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. தொடர் மழையால், ராய்காட் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது.