முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் உட்பட 16 பேரும் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்கள் இராணுவ  பஸ்களில் இன்றிரவு அழைத்துவரப்படவுள்ளனர்.

கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக பத்தரமுல்ல நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் ஜூலை 8ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜோசப் ஸ்டாலின் உட்பட சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் பலவந்தமாக முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

இதே வேலை முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

fghfghiuuu

பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டதற்காக  கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னிலைய சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் உட்பட 6 பேரை பலவந்தமாக கடத்திச் சென்று தனிமைப்படுத்தல் என்ற போர்வையில் பல்லேகல இராணுவ முகாமில் தடுத்து வைத்தனர்.

இந்த 6 பேரினதும் PCR பரிசோதனை முடிவுகளின்படி அவர்களுக்கு கொரோனா தொற்றியிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

தடுத்து வைக்கப்பட்டு 8 நாட்களின் பின்னர் அவர்கள் அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி