சீதுவ பகுதியில் பொலிஸ் எஸ்.டி.எஃப் இணைந்து மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் லலித் பிந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீதுவ பேஸ்லைன் வீதியில் உள்ள அமந்தொலுவ​ பகுதியில் நேற்று இரவு (17) துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

பொலிஸ் ஊடகபேச்சாளர் அஜித் ரோஹன, நேற்று இரவு (17) பொலிசாருக்கும் எஸ்.டி.எஃப் இற்கும் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் வாகனத்தில் இருந்த ஒருவர் காயமடைந்து நீகொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளார்.

இறந்தவர் சீதுவயில் வசிக்கும் 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

1991 ஆம் ஆண்டு முதல் சீதுவ, வத்தல, மாத்தர, அகுரெஸ்ஸ, கட்டுநாயக்க மற்றும் ராகம பொலிஸ் பிரிவுகளில் நடந்த பல குற்றங்கள் மற்றும் ஆறு கொலைகளுடன் சந்தேகநபர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் மேலும் இரண்டு பேர் காருக்குள் இருந்ததாகவும், சம்பவ இடத்தில் ஒரு கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சீதுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி