ராஜரட்ணத்தை புதிய சட்டமா அதிபராக நியமிக்க இணக்கம்!
இலங்கையின் பதில் மன்றாடியார் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தை புதிய சட்டமா அதிபராக நியமிக்க இலங்கையின் நாடாளுமன்றப் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பதில் மன்றாடியார் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தை புதிய சட்டமா அதிபராக நியமிக்க இலங்கையின் நாடாளுமன்றப் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டு நாளை வெள்ளிக்கிழமை இரவு முதல் மீண்டும் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
உயர்நீதிமன்றம் பரிந்துரைக்கும் அனைத்து திருத்தங்களையும் கொழும்பு துறைமுக ஆணைக்குழு சட்டமூலத்திற்கு, குழுநிலை விவதாத்திற்கு உள்ளடக்கப்பட்டால் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றிக் கொள்ள முடியுமென உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இது சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் நேற்று (18) அறிவித்தார்.
அமெரிக்காவில் தடுப்பூசி போட்டவர்கள் முக கவசம் அணியத் தேவையில்லை என்ற அறிவிப்பால், பல இடங்களில் குழப்பம் நிலவி வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு கோளில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று (18) நாட்டில் மேலும் 34 கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறுவதற்கேற்ப மே 11லிருந்து மே 18 வரை நிகழ்ந்த கொவிட் மரணங்கள் என்ற வகையில் இந்த 34 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களை கவனத்திற் கொள்ளாமல் நாட்டின் வளங்களை விற்பனை செய்ய இந்த அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
போகம்பரை சிறைச்சாலையில் 104 தடுப்புக்காவல் கைதிகளுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பொதுப்போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டிய அதிகாரங்களை பகிர்ந்தளித்திருந்தால் இலங்கையில் இரத்த ஆறு ஓடியதை தடுத்திருக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை 3 மணிக்கு மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தன்னை விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உச்சநீதிமன்றத்தில் அடிப்டை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 வயதான இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.