கொவிட் தடுப்பூசிகளுக்கான இலங்கையின் மருந்து கட்டுப்பாட்டு நிபுணர்கள் ஆலோசனை அமைப்பின் எட்டு உறுப்பினர்களில் மூன்று பேர் நேற்று பதவி விலகியுள்ளனர்.

சீனாவின் தடுப்பூசியான சினோவாக்கை இலங்கையில் பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ஒப்புதல் அளித்த பின்னர் இவர்கள் பதவி விலகியுள்ளனர்.

நோயெதிர்ப்பு நிபுணர் வைத்தியர் ராஜீவ டி சில்வா, வைராலஜிஸ்ட் வைத்தியர் காந்தி நாணயக்கார மற்றும் சுவாச மருத்துவர் பேராசிரியர் சன்ன ரணசிங்க ஆகியோரே பதவி விலகியுள்ளனர்.

செய்வதற்கான தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் புறக்கணிப்பு மற்றும் தடுப்பூசி ஆலோசனைக் குழுவின் விஞ்ஞான அறிவியல் ஆலோசனைகள் மீறிப்பட்டமை காரணமாகவே தாம் பதவி விலகியுள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று கூறியுள்ளது.

பதவி நீக்குதல், விலகல் மற்றும் புதிய உறுப்பினர்கள் நியமித்தல் உள்ளிட்ட பிரச்சனைகளில் இந்த ஆலோசனைக் குழு தொடர்ந்தும் சிக்கியுள்ளது.

2021, ஜூன் 9 அன்று, இலங்கையில் பயன்படுத்த குறைந்தபட்சம் 2 மில்லியன் சினோவாக் குப்பிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டுமா என்று தீர்மானிக்கும் அவசர கூட்டத்தில், ஆலோசனை நிபுணர் குழு இரண்டாக பிரிவடைந்தது. அந்த கூட்டத்தில் சினோவாக் "குறைவான பயனுள்ள தடுப்பூசி" என்று அந்த கூட்டத்தில் முழு குழுவும் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் ஒரு குழு சினோவாக்கின் குறிப்பிட்ட தொகையை இறக்குமதி செய்ய நிபந்தனைகளுடன் "வரையறுக்கப்பட்ட" ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என்று கூறியது. எனினும் மற்ற குழு அதனை ஏற்கவில்லை. சினோவாக் இரண்டு அளவைப் பெற்று ஆறு மாதங்களுக்குப் பிறகு, மற்றும் ஒரு ஊக்கியும் தேவைப்படும் என்று சினோவாக் ஆவணங்கள் தெளிவாகக் கூறியுள்ளன.

உலக சுகாதார அமைப்பு (WHO) சினோவாக்கிற்கான அவசரகால பயன்பாட்டு பட்டியலை (EUL) வழங்கியுள்ளது. சீனாவின் தடுப்பூசிகளை மேற்கத்திய உற்பத்திகளுடன் கலந்து செலுத்தப்போவதாக ஏனைய தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூறியுள்ளதால், மலேசியாவின் சுகாதார அமைச்சகம் அதன் தற்போதைய கையிருப்பு முடிந்தவுடன் சினோவாக் பயன்படுத்துவதை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின்படி சினோவாக்கின் முதல் அளவை பெற்றவர்களுக்கு எஸ்ட்ராசெனெகாவை கொடுக்க தாய்லாந்து தயாராக உள்ளது; சீனாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளையும், மேற்கு உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளையும் கலந்து பொருத்தும் திட்டத்தை தாய்லாந்து அறிவித்துள்ளது;

கடுமையான பரவலால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியா, சினோவாக்கின் இரண்டு அளவுகளுடனும் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மேலதிக ஊக்கி ஒன்றை செலுத்த எதிர்பார்க்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான லொன்செட் மைக்ரோப் இதழில் வெளியிடப்பட்ட ஹொங்காங் பல்கலைக்கழகத்தின் ஒரு குழு மேற்கொண்ட ஆய்வின் படி இது சினோவாக் கொடுக்கப்பட்டவர்களுக்கு “மாற்று உத்திகள்” (பூஸ்டர் டோஸ்) தேவைப்படலாம் என்று கூறியுள்ளது. ஃபைசர் தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது, ​​சினோவாக் தடுப்பூசி என்டிபொடி(பிறப்பொருள் எதிரி )அளவை நடுநிலையாக்கும் ஒரு “குறிப்பிடத்தக்க” குறைந்த அளவையே வெளிப்படுத்தியது. சிலியிலும் மருத்துவ சோதனை ஆய்வாளர்கள் மூன்றாவது அளவை பரிந்துரைத்தனர்.

இதேவேளை இலங்கையில் சினோவாக்கின் 13 மில்லியன் குப்பிகளை இறக்குமதி செய்வதற்கான நகர்வுகள் இருப்பதாக கொழும்பின் ஊடகம் கூறியுள்ளது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி