தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நியமனம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவியிருக்கும் கடிதம் குறித்து ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, ​​ஜனாதிபதி இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்ததை உறுதிப்படுத்தினார்.

இந்த நியமனம் தொடர்பான ஜனாதிபதியின் கையொப்பத்துடன் கிராமிய வீட்டுவசதி மற்றும் கட்டுமான கட்டிட பொருட்கள் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நியமனத்தை ஏற்குமாறு ஜனாதிபதி அழைப்புவிடுத்துள்ளார்.

கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டுமாண கட்டிட பொருள் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த,கபினட் அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

துமிந்த சில்வா சமீபத்தில் பிரதமரை சந்தித்திருந்தார்.

கோதபாய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது, ​​துமிந்த சில்வா பாதுகாப்பு கண்காணிப்பு உறுப்பினராக இருந்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்தா சில்வா கடந்த பொசன் போயா தினத்தில் ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

அவரது நியமனக் கடிதம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகின்றது.

WhatsApp Image 2021 07 17 at 8.46.35 PM

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி