காடுகளின் கலைக்களஞ்சியம்" என்று அனைவராலும் அழைக்கப்படும் அவர் அங்குள்ள மக்களால் ' மரங்களின் தெய்வம் " என்றும் அழைக்கப்படுகிறார்.

2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 119 பேருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது . இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன .

இதில் கர்நாடாகாவை சேர்ந்த துளசி கவுடாவும் ஒருவர்.77 வயதாகும் துளசி கவுடா கர்நாடகாவின் அங்கோலா தாலுக்காவின் ஹொன்னாலி கிராமத்தைச் சேர்ந்தவர்.இவர்  30,000 மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். கடந்த ஆறு தசாப்தங்களாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

1944 ஆம் ஆண்டு  ஹக்கலி பழங்குடி குடும்பத்தில் பிறந்தவர் துளசி கவுடா. காடுகளின் மரங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றிய அவரது விரிவான அறிவை கொண்டு இருப்பதால் "காடுகளின்  கலைக்களஞ்சியம்" என்று அனைவராலும் அழைக்கப்படும் அவர் அங்குள்ள மக்களால் ' மரங்களின் தெய்வம் " என்றும்  அழைக்கப்படுகிறார்.

நேற்று நடந்த விழாவில் விருது வழங்குவதற்காக  இவரது பெயர் அழைக்கபட்டபோது ஜனாதிபதியை நெருங்கிய துளசி கவுடா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கைகூப்பி மரியாதை செலுத்தினார்  . பதிலுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் , அமித்ஷாவும் அவரை நோக்கி கைகூப்பி மரியாதை செலுத்தினர் . இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி