ஓய்வு பெற்றுள்ள அரச ஊழியர்களின் அக்ரஹார காப்பீட்டுத் தொகை வழங்குவதற்காக ஓய்வூதியத்திலிருந்து மாதாந்த பங்களிப்பை பிடித்தம் செய்வதை ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரச சேவையிலிருந்து 2016க்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களை இலக்கு வைத்து 70 வயதிற்கு குறைந்த ஓய்வு பெற்றவர்களிடமிருந்து மாதாந்தம் ரூ.400ம், 70 வயதிற்கு மேற்பட்டவர்களிடமிருந்த மாதாந்தம் ரூ.600ம் மாதத் தவனையாக அறவிடப்படுமென அரச நிர்வாக அமைச்சு சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.

2016 ஜனவரி 1ம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களிடமிருந்து இவ்வாறு தவனை அறவிடுவது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியத்திலிருந்து மேற்படி பணம் அறவிடுவதை ஓய்வு பெற்ற ஒருவர் எதிர்ப்பதாயின், நவம்பர் 12ம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்தில் அறிவிக்கப்பட வேண்டுமெனவும், அன்றைய தினத்திற்குப் பின்பு விருப்பை மாற்ற முடியாதெனவும் சுற்றுநிறுபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய தவனை அறவிடப்படும் ஓய்வூதியம் பெறுபவர்கள் தனியார் வைத்தியசாலையொன்றில் தங்கி சிகிச்சை பெறுவதாயின், ஆகக் கூடிய 10 நாட்களுக்கு ரூ.120,000, அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாயின் ஆகக் கூடிய 10 நாட்களக்கு நாளொன்றிற்கு ரூ.500 வீதம் ஆகக் கூடிய 20 நாட்களுக்கு ரூ.10,000 காப்புறுதிப் பணமாக ஒரு வருடத்திற்கு வழங்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், இந்தப் பணத்தை பிடித்தம் செய்வதை பெரும்பாலான ஓய்வூதியம் பெறுவோர் எதிர்ப்பதாக பிரதே செயலகத்தில் அமைந்துள்ள ஓய்வூதிய பிரிவிற்கு அறிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

( லங்காதீப )

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி